தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!!

Rain Today: சென்னை, திருவள்ளூர் உள்பட வட மாவட்டங்களில் நேற்றைய தினம் காலை முதல் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து, இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

18 Dec 2025 06:19 AM

 IST

சென்னை, டிசம்பர் 18: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்து வந்தள்ளதால் தென் மாவட்டங்களில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது. அதேசமயம், வட தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். இதேநிலை 21ம் தேதி வரை நீடிக்கும். அதற்கு பிறகு படிப்படியாக மழை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னை, திருவள்ளூர் உட்பட வட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில், நேற்று காலை முதல் மிதமான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : சொத்து பத்திரத்தில் டிஜிட்டல் கையெழுத்து.. மோசடிகளை தடுக்க வருகிறது புதிய மாற்றம்!!

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு:

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வட தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். இதேநிலை 21ம் தேதி வரை நீடிக்கும். அதற்கு பிறகு படிப்படியாக மழை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக இலங்கை அருகே நீடித்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தெற்கு நோக்கி நகர்ந்து குமரிக் கடலின் தெற்கே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாலை அடர் பனிமூட்டம் நிலவும்:

தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், இன்று தொடங்கி 21ம் தேதி வரையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை குறைந்து காணப்படும். அதோடு, பல இடங்களில் அதிகாலை அடர் பனிமூட்டம் நிலவக்கூடும் என்பதால், குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்கள் கட்சிக்கு அதிமுக என்ற பெயர் எதற்கு? – முதல்வர் ஸ்டாலின் காட்டம்..

தென்மாவட்டங்களில் பரவலாக மழை:

வட மாவட்டங்களில் நேற்று மழை பெய்த நிலையில், ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் நேற்றிலிருந்து கனமழை பெய்து வருகிறது. பாம்பன், கீழக்கரை, முதுகுளத்தூர், கமுதி, விளாத்திகுளம், மானாமதுரை, இளையாங்குடி, விருதுநகர் பகுதிகளிலும் நேற்று மதியத்துக்கு பிறகு மழை பெய்யத் தொடங்கியது. பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறு, பாளையங்கோட்டை, கொற்கை, காயல்பட்டினம், கூடங்குளம், பத்தமடை, மணிமுத்தாறு, பாபநாசம், குற்றாலம் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. திண்டுக்கல் திருப்பூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்தது.

உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?