Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தை பாராட்டிய ஐ.நா -முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்

புவி வெப்பமயமாதல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதற்காக தமிழ்நாட்டை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டி உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கையில் நாட்டுக்கே தமிழ்நாடு வழிகாட்டி வருகிறது.

தமிழகத்தை பாராட்டிய ஐ.நா  -முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Dec 2025 21:04 PM IST

சென்னை, டிசம்பர் 17: புவி வெப்பமயமாதல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதற்காக தமிழ்நாட்டை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டி உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கை மற்றும் நடவடிக்கை என இரண்டிலும் நாட்டுக்கே தமிழ்நாடு வழிகாட்டி வருகிறது. துறையின் பெயரிலேயே காலநிலை மாற்றத்தை சேர்த்து தொடங்கி, முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.500 கோடியை ஒதுக்கி பல இயக்கங்களை செயல்படுத்துவது திராவிட மாடல் அரசின் காலநிலை மாற்ற செயல்பாடுகள் இந்தியாவுக்கே ப்ளூபிரிண்ட்டாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டை பாராட்டிய ஐ.நா.

மேலும் அவர் தனது பதிவில்,  வருகிற 2070 ஆம் ஆண்டிற்கு முன்னரே நெட் ஜீரோ இலக்கை அடைய வேண்டும் என அனைத்து நிலைகளிலும் உழைத்து வருகிறோம். அதனால்தான் ஐ.நா.வே தமிழ்நாட்டை பாராட்டியுள்ளது. இது ஒரு நீண்ட காலப் பயணம் என்ற போதிலும், நமது முயற்சிகளின் விளைவாகப் பல உடனடிப் பயன்கள் மூன்றாண்டுகளாகக் கிடைத்து வருகின்றன.

இதையும் படிக்க : 100 நாள் வேலை திட்டத்தை அரசியலாக்குகின்றனர்….தமிழிசை செளந்தர ராஜன்!

மேலும், எதிர்காலச் சந்ததியினர் வாழப் பாதுகாப்பான சூழலை உறுதிசெய்ய, தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆட்சி மன்றக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் நமது அரசு உறுதியாக உள்ளது என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு மக்கள் தங்கள் பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.  இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு

 

இதையும் படிக்க : இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்கள் கட்சிக்கு அதிமுக என்ற பெயர் எதற்கு? – முதல்வர் ஸ்டாலின் காட்டம்..

இது தொடர்பாக வீடியோவில் பேசிய அவர், நம் அரசுக்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் இன்னொரு கண். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது தான் எதிர்கால சந்ததியினருக்கு உண்மையான வளர்ச்சியாக இருக்கும். அண்மையில் பிரேசிலில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில், உலக காலநிலை அமைப்பை உருவாக்க வேண்டும் என முன்மொழிந்திருக்கிறார்கள். ஆனால் 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே காலநிலை ஆட்சி மன்றக் குழுவை உருவாக்கி செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். அதனுடைய முடிவு தான் நமக்கு கிடைக்கும் பாராட்டுகளும் உலக அங்கீகாரங்களும் என்றார்.