Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ்நாட்டில் மேலும் 10 புதிய காவல் நிலையங்கள் – எங்கெங்கு தெரியுமா?

New Police Station : தமிழ்நாட்டில் குற்றசெயல்களில் விரிவான நடவடிக்கை எடுக்கும் வகையில், மேலும் 3 உட்கோட்டங்கள் மற்றும் 10 காவல் நிலையங்கள் வருகிற டிசம்பர் 22, 2025 முதல் செயல்பாட்டு வரவிருக்கின்றன. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவிருக்கிறார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் மேலும் 10 புதிய காவல் நிலையங்கள் – எங்கெங்கு தெரியுமா?
மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Dec 2025 18:17 PM IST

சென்னை, டிசம்பர் 17:  தமிழக காவல்துறையின் (Police) நிர்வாக செயல்திறன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், 3 புதிய உட்கோட்டங்கள் மற்றும் 10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும், அவை  இந்த டிசம்பர் 22, 2025 அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) தொடங்கி வைக்க உள்ளார்.  இதற்கான அறிவிப்பை தமிழக அரசு டிசம்பர் 17, 2025 அன்று வெளியிட்டுள்ளது.  இதன் மூலம் அரசு நிர்வாகத்தை மேம்படுத்தவும், குற்ற தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளவும், சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிக்கவும் இந்த நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலையங்கள் எங்கெங்கு அமைக்கப்படவுள்ளன எனப்து குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

புதிய உட்கோட்டங்கள்

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் புதிய காவல் உட்கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் படி காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கன்னி, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளன.  இந்த புதிய உட்கோட்டங்கள் மூலம், அந்தப் பகுதிகளை அரசால் சுலபமாக நிர்வகிக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த 3 உட்கோட்டங்களும் வருகிற டிசம்பர் 22, 2025 அன்று செயல்பாட்டு வரவுள்ளன.

இதையும் படிக்க : அன்புமணி செய்வது வேதனையாக உள்ளது.. பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் 10 புதிய காவல் நிலையங்கள்

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நகர்புற பகுதிகளில் மேலும் 10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த காவல் நிலையங்கள் மூலம் குற்றச்செயல்களை விரைந்து தடுக்கவும், குற்றங்களை கட்டுப்படுத்த உதவும் வகையில் உருவாக்கப்படவுள்ளன.

அதன் படி, நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை, தர்மபுரி மாவட்டம் புளிக்கரை, சிவகங்கை மாவட்டம் கீழடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கலமருதூர், திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை கோவில் காவல் நிலையம், மதுரையில் சிந்தாமணி பகுதியில் காவல்நிலையம், மதுரை மாநகரில் மடக்குளம் பகுதி, கோயம்புத்தூர் மாவட்டம் நீலாம்பூர் பகுதி, திருநெல்வேலி மாவட்டம் மேலவாசல், திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் என காவல்நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றன.

இதையும் படிக்க : சொத்து பத்திரத்தில் டிஜிட்டல் கையெழுத்து.. மோசடிகளை தடுக்க வருகிறது புதிய மாற்றம்!!

இதன் மூலம் அந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு புகார் பதிவு, விசாரணை, அவசர உதவி உள்ளிட்ட சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கும். இதன் மூலம் குற்ற வழக்குகளை நிர்வகிப்பதில் காவல்துறையினருக்கு உள்ள சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 10 புதிய காவல்நிலையங்களும் வருகிற ஜனவரி 22, 2025 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலையங்கள் உருவாக்கப்படுவதால், காவல் அதிகாரிகளின் கண்காணிப்பு விரிவடையும். குற்ற சம்பவங்களுக்கு உடனடி நடவடிக்கை சாத்தியமாகும். பொதுமக்கள் காவல் நிலையங்களை அணுக வேண்டிய தூரம் குறையும், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலையங்களை, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த டிசம்பர் 22, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ளார். தமிழக காவல் துறையை மேம்படுத்தும் அரசின் நடவடிக்கைகளில் இது முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.