திசை மாறும் காற்றழுத்தம்.. தமிழகத்தில் இன்று கொட்டப்போகுது மழை.. வானிலை நிலவரம் இதோ..
Weather Forecast: நாளையும் (பிப்.24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்.25 மற்றும் பிப்.26ம் தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோப்புப் புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 23: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு, வடமேற்கு திசையில் நகரத் துவங்கியுள்ளதால், தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை நிலரப்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, அதே பகுதியில் நிலவியது. இது, தென்மேற்கு வங்கக்கடலில் மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதாவது, தமிழக கடற்கரையை விட்டு விலகிச் செல்ல வாய்ப்புள்ளது. அதோடு, தமிழகம் உட்பட தென்மாவட்டங்கள் மீது, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதையும் படிக்க : தொகுதி பங்கீடு பேச்சு.. திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள்.. முதல்வர் பிறந்தநாளில் பட்டியல் வெளியீடு!
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு:
அதன் காரணமாக இன்று (பிப்.23) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும் மழைக்கு வாய்ப்பு:
அதேபோல், நாளையும் (பிப்.24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் வானிலை நிலவரம்:
பிப்.25 மற்றும் பிப்.26ம் தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
27ம் தேதி மற்றும் 28ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதிகாலையில் பனிமூட்டம்:
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இதையும் படிக்க : பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள்.. கட்டுப்பாட்டை இழுந்து வந்த கார்.. அடுத்து நடந்த சோக சம்பவம்!
சென்னையில் இன்று வானிலை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 33-34 செல்சியஸை ஒட்டி இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.