Weather Alert: இந்த மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகுது.. வானிலை நிலவரம் இதோ..
Weather Forecast: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக்கூடும்.
சென்னை, பிப்ரவரி 22: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழையும், மற்ற பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் சனிக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) உருவானது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “விஜய் கை காட்டுபவரே வேட்பாளர்”.. சீட் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டால் நடவடிக்கை.. தவெக எச்சரிக்கை!!
4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (பிப்ரவரி 22)திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என கூறியுள்ளது.
வரும் நாட்களில் மழை பெய்யுமா?
பிப். 23 முதல் 26 வரை தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக்கூடும்.
மேலும் படிக்க: சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் மூழ்கிய இரு சிறுமிகள்.. கண்ணில் தெரிந்த அசைவு.. அடுத்து நேர்ந்த துயரம்!
மீனவா்களுக்கான எச்சரிக்கை:
இதற்கிடையே, மன்னாா் வளைகுடா அதனையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், வங்கக் கடலில் பிப்.22-ஆம் தேதி மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.