ஜூலை 28ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. விருதுநகர் ஆட்சியர் அறிவிப்பு!
Virudhunagar Local Holiday : ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, 2025 ஜூலை 28ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி வேலை நாளாக அறிவித்துள்ளார் ஆட்சியர் சுகபுத்ரா.

மாணவர்கள்
விருதுநகர், ஜூலை 22 : விருதுநகர் மாவட்டத்திற்கு 2025 ஜூலை 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை (Virudhunagar Local Holiday) அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் (Srivilliputhur Andal Temple) தேரோட்டத்தை முன்னிட்டு, 2025 ஜூலை 28ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்து வருகிறது. குறிப்பிட்ட மாவட்டங்களில் திருவிழாக்கள், முக்கிய தினங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த தினத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது. ஆனால், இந்த விடுமுறை சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு மட்டுமே.
மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும். அந்த வகையில், தற்போது விருதுநகர் மாவட்ட ஆடசியர் சுகபுத்ரா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, விருதுநகர் மாவட்டத்திற்கு 2025 ஜூலை 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீஆண்டாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
Also Read : ஜூலை 23ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அரியலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
இந்த நிலையில், இந்த கோயிலில் ஆடி மாதம் நடைபெறும் தேரோட்டம் மிகவும் பிரசித்து பெற்றது. இதனை காண, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில், 2025 ஜூலை 28ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோயிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : பள்ளிகளில் ’ப’ வடிவில் இருக்கை வசதி.. நிறுத்தி வைத்ததா பள்ளிக்கல்வித்துறை? உண்மை என்ன?
2025 ஜூலை 28ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவித்துள்ளார். இதன் மூலம், மாணவர்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. 2025 ஜூலை 26ஆம் தேதி சனிக்கிழமை, 27ஆம் தேதி ஞாயிற்று கிழமை, 28ஆம் தேதி திங்கள் என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை இருக்கிறது. இதனால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இருப்பினும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவும் மாவட்ட நிர்வாகம்.