நாளை முதல்வராக பதவியேற்கும் விஜய் – எப்போ தெரியுமா? வெளியான தகவல்
TVK Vijay : ஆளுநரிடம் பெரும்பான்மயைை நிரூபித்த நிலையில் தவெக தலைவர் விஜய் மே 10 2026 அன்று காலை 10 மணியளவில் முதல்வராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.

ஆளுநருடன் விஜய்
சென்னை, மே 9 : ஆளுநரிடம் பெரும்பான்மயைை நிரூபித்த நிலையில் தவெக தலைவர் விஜய் மே 10 2026 அன்று மதியம் 3.15 மணியளவில் முதல்வராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியமைக்க தேவையான முழு பெரும்பான்மை கிடைத்த நிலையில் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க விஜய் உரிமை கோரினார். தற்போது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லீம் லீக் என 120 எம்எஎல்ஏகளின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தவெக தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா மே 10, 2026 திங்கள் கிழமை நடைபெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வராக பதவியேற்கும் விஜய்
நீண்ட இழுபறிகளுக்கு பிறகு தவெக தலைவர் விஜய் மே 9, 2026 இன்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து தனது பெரும்பான்மையை நிரூபித்தார். இதனை ஆளுநரும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விஜய் மே 10, 2026 அன்று காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.
இதையும் படிக்க : ஆதரவு தவெகவுக்கு… இருப்பது திமுக கூட்டணி – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
ஆளுநருடன் சந்திப்பு
#WATCH | TVK Chief Vijay meets Tamil Nadu Governor Rajendra Vishwanath Arlekar at the Lok Bhavan.
With the support of Congress, CPI, CPI(M), VCK and IUML, 121 MLAs are now in support of TVK, and its path to form a government in the state is now clear.
(Source: Lok Bhavan) pic.twitter.com/Tbck1TrAKJ
— ANI (@ANI) May 9, 2026
கடந்த சில நாட்களாக போதிய ஆதரவு கிடைக்காத நிலையில் தவெக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காமல் இருந்து வந்தார். மற்றொரு பக்கம் திமுக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆட்சியமைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதற்கேற்ப அதிமுக தங்களது எம்எல்ஏகளை புதுச்சேரியில் உள்ள விடுதியில் தங்க வைத்திருந்தனர். அதில் சில எம்எல்ஏகள் தவெகவிற்கான ஆதரவு மனப்பான்மையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிக்க : தவெக ஆட்சி அமைக்க விசிக ஆதரவு – கடிதத்தை வழங்கினார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்!
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏகளின் ஆதரவு கிடைத்தது. இதனையடுத்து 120 எம்எல்ஏகளின் ஆதரவுடன் விஜய் மே 9, 2026 மாலை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து ஆட்சியமைக்க ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு விஜய் முதல்வராகிறார்.