சிபிஐ விசாரணை கேட்டது விஜய் தான் – நீதிமன்றம் சென்றது சரியில்லை – பவன் கல்யாண் பரபரப்பு கருத்து
Pawan Kalyan On Vijay : நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், விஜய் தான் சிபிஐ விசாரணை கேட்டதாகவும், சிபிஐ வைத்து அவரை என்டிஏ கூட்டணியில் இணைப்பதற்கு சிபிஐ ஆயுதமாக பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

விஜய் - பவன் கல்யாண்
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகரும் ஆந்திர பிரதேசம் மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசினார். குறிப்பாக தவெக தலைவர் விஜய் குறித்து பேசிய அவர், விஜய்யை கூட்டணிககு இழுக்கு ஆயுதமாக சிபிஐ விசாரணையை பயன்படுத்தவில்லை என்றும் கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கேட்டது விஜய் தான் என்றும் தான் நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
‘சிபிஐ விசாரணை கேட்டது விஜய் தான்’
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பவன் கல்யாண் விஜய் குறித்து பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதற்காக சிபிஐ ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக பரவும் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்தார். இதுகுறித்து பேசிய அவர், விஜய்யை கூட்டணிக்கு இழுக்கும் ஆயுதமாக சிபிஐ விசாரணையை பயன்படுத்தவில்லை என நான் நினைக்கிறேன். கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கேட்டது விஜய் தான். நான் கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜகவுடன் இல்லை. அவர்களுக்கு எதிரான மனநிலையில் இருந்தேன். ஆனால் அப்போது அவர்கள் என்னை மிரட்டவில்லை என்றார்.
இதையும் படிக்க : ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்
மேலும் ஜனநாயகன் படத்துக்கு ஏற்பட்டுள்ள சென்சார் சிக்கல் குறித்தும் அவர் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, ஜனநயாகன் பட பிரச்னையை நீதிமன்றம் வரை கொண்டு சென்றது சரியில்லை. அதே நேரத்தில் ஜனநாயகன் பட பிரச்னைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தான் காரணம் என கூறுவதும் சரியானது இல்லை.
என்னுடைய ஓஜி படத்துக்கு கூட ஏ சான்றிதழ் தான் கொடுத்தார்கள். அப்போது நீங்கள் என்டிஏவில் இருக்கும் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்களே என தயாரிப்பாளர்கள் கேட்டார்கள். விதிகள் எல்லோருக்கு சமமானது. அது யாருக்காகவும் வளைந்து கொடுக்காது என்று பதில் சொன்னேன் என்றார். அவரது கருத்து தமிழக வெற்றிக் கழகத்தினரிடம் மட்டும் மல்ல மற்ற கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க : 5 பேரிடம் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிப்பு – விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு – நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்
இதற்கிடையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் 2 ஆம் கட்ட வேட்பாளர்கள் நேர்காணல் நடத்துவது குறித்தும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 25 நாட்கள் விஜய் பரப்புரை செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.