Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மிக கனமழை; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

Schools holiday: நவம்பர் மாத தொடக்கம் முதல் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்து காணப்பட்ட நிலையில், மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பதிவாகக்கூடும் என்றும், மாத இறுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

மிக கனமழை; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!
கோப்புப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Nov 2025 07:58 AM IST

மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நாகையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, மிக கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, மழையின் தீவிரத்தை பொறுத்து அடுத்தடுத்த மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து  செல்லக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் படிக்க: நவ. 24 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புயல்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்..

இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்:

இதையொட்டி, இன்று  (நவ.17) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே வானம் இருள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அந்தவகையில், நகரின் ஒருசில பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் முன்னறிவித்திருந்தது.

அடுத்த 3 மணி நேரத்தில் மழை வாய்ப்பு:

இதனிடையே, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

மேலும் படிக்க: ஆந்திராவுக்கு சென்ற தென் கொரிய நிறுவனம்.. விலாசிய நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி..

அதேபோல், ராணிப்பேட்டை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. இதையொட்டி, பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கையோடு பாதுகாப்பாக செல்லவும்.

நாளை கனமழை வாய்ப்பு:

தொடர்ந்து, நாளை (நவ.18) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது