‘சதி வலையில் சிக்கிய விஜய்’ கரூர் சம்பவம் குறித்து திருமாவளவன் விமர்சனம்!

Karur TVK Rally Stampede : கரூர் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் வீடியோ வெளியிட்டிருந்தார். இதில், கரூர் விவகாரத்தில் திமுகவை அவர் மறைமுகமாக குற்றச்சாட்டி இருந்தார். இதற்கு தற்போது விசிக தலைவர் தொல். திருமாவளவன் விஜயை விமர்சித்துள்ளார்.

சதி வலையில் சிக்கிய விஜய் கரூர் சம்பவம் குறித்து திருமாவளவன் விமர்சனம்!

திருமாவளவன்

Updated On: 

01 Oct 2025 08:42 AM

 IST

சென்னை, அக்டோபர் 01 : சங் பரிவார்களின் சதி வலையில் விஜய் சிக்கி உழல்வதையே உறுதிப்படுத்துகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 2025 செப்டம்பர் 30ஆம் தேதியான நேற்று கரூர் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், திமுகவை அவர் குற்றச்சாட்டி இருந்தார். இதற்கு தற்போது திருமாவளவன் விமர்சித்து இருக்கிறார். 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அவர் இரவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது இவரை காண 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் ரசிகர்கள் கூடிருந்தனர். விஜய் பேசிக் கொண்டிருக்கும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. கூட்ட நெரிசலால் மூச்சு திணறல் மயக்கம் அடைந்து தொண்டர்கள் ரசிகர்கள் உயிரிழந்தனர்..

இதில் 41 பேர் உயிரிழந்த நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் தற்போது 50 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்து ரூ.50 லட்சம் நிவாரணமாக வழங்கினார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கூறி தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆளுங்கட்சியான திமுகவையும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் சமூக வலைதளங்களில் தவெகவினர் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் விஜய் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..

Also Read : கலரத்தை தூண்டும் வகையில் பதிவு – ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு

‘சதி வலையில் சிக்கிய விஜய்’

அதில், மற்ற மாவட்டங்களில் நடக்காதது, கரூர் மாவட்டத்தில் எப்படி நடந்தது என்ன கேள்வி எழுப்பிய அவர், தனது தொண்டர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டுமென கூறினார். மேலும், கரூர் விவகாரத்தில் பின்னணியில் திமுக இருப்பதாகவும் மறைமுகமாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தற்போது விசிக தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

அவர் கூறுகையில், “விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள காணொளி பதிவில் அவர் முதல்வர் மீது பழிசுமத்தும் வகையில் பேசியிருப்பது அவரது அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சங் பரிவார்களின் சதி வலையில் அவர் சிக்கி உழல்வதையே உறுதிப்படுத்துகிறது. அவர்மீதான பரிவுணர்ச்சியும் வீண் என்று எண்ணிட வைத்துள்ளது. அரசியல் ஆதாயம் தேடுவதையே நோக்கமாக்க் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. இதன்மூலம் அவர் அம்பலப்பட்டு நிற்கிறார்.

Also Read : தடியடி நடத்தப்பட்டதா? மின்சாரம் ஏன் நிறுத்தப்பட்டது – அரசு தரப்பில் வெளியான விளக்கம்

விஜய் அவர்களுக்குத் தவறான வழிகாட்டுதலையும் திமுகவுக்கு எதிரான வெறுப்பு அரசியலைப் போதிப்பதையும் துணிந்து செய்பவர்களின் கோரப்பிடியில் அவர் சிக்கியுள்ளார் என்றே உணரமுடிகிறது. அவர் இதனை உணர்ந்திட முயற்சிக்கவில்லை என்றால், இவர் மற்றவர்களின் கைக் கருவியாக முடங்கும் நிலையே உருவாகும். தமிழ்நாட்டை அவர்கள் குறிவைத்து வெளிப்படையாகவே தங்களின் சித்துவிளையாட்டைத் தொடங்கிவிட்டார்கள் என்பதையும்; விஜய் அவர்கள், ‘பாஜகவினரின் கருவி தான்’ என்பதையும் உறுதிப்படுத்துகின்றனர்” என்றார்.