Thirumavalavan: எம்ஜிஆர், ஜெயலிதா குறித்து அவதூறாக பேசினேனா..? திருமாவளவன் விளக்கம்..!

MGR, Jayalalithaa Clarification: திருமாவளவன், கருணாநிதி நினைவுச்சின்ன நிகழ்வில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். தமிழக அரசியலின் வரலாற்றுப் பின்னணியை விளக்கவே அவர் பேசியதாகவும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மீது மரியாதை உடையவர் என்றும் தெரிவித்துள்ளார்.

Thirumavalavan: எம்ஜிஆர், ஜெயலிதா குறித்து அவதூறாக பேசினேனா..? திருமாவளவன் விளக்கம்..!

திருமாவளவன்

Updated On: 

09 Aug 2025 20:16 PM

திருச்சி, ஆகஸ்ட் 9: முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் (Karunanidhi) நினைவஞ்சலியின் நிகழ்வின்போது கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் (MGR) மற்றும் ஜெயலலிதா குறித்து அவதூறான கருத்தைகளை கூறியதாக கூறப்பட்டது. இதுகுறித்து பேசிய அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் அரசியலில் இருந்து திருமாவளவன் காணாமல் போய் விடுவார் என்று தெரிவித்தார். தற்போது இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் (Thirumavalavan) விளக்கம் கொடுத்துள்ளார்.

திருமாவளவன் விளக்கம்:


சென்னையிலிருந்து வந்திறங்கியதும் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், “தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக அரசியல் எப்படி இயங்கி வந்தது, எப்படி கட்டமைக்கப்பட்டது என்பது குறித்த பேச்சில்தான் எம்ஜிஆரை குறிப்பிட்டேன். முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது எனக்கு அதீத மதிப்பும், மரியாதையும் உண்டும். அவர்களை பலமுறை மனம் திறந்து நான் பாராட்டியதும் உண்டு. தமிழக அரசியலை பொறுத்தவரை கருணாநிதியை எவ்வாறு மையப்படுத்தி, அவருக்கு எதிர்ப்பு அரசியலாக மாறியது என்பது குறித்து அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியின் பேசினேனே தவிர, எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கமும் என்னிடம் இல்லை, ஜெயலலிதா, எம்ஜிஆரை ஒரு சாதிக்குள் சுருக்கவும் இல்லை” என்று கூறினார்.

ALSO READ: கட்சியில் சேர்ந்த ஒரே வாரம்… அன்வர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பு.. திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

திமுக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடா..?

திமுக தலைமையிலான கூட்டணி குறித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுக கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வேண்டுமென்பது எடப்பாடி பழனிசாமியின் ஆசை. வெறும் 8 மாத காலத்தில் மிகப்பெரிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்று இபிஎஸ் விரும்புகிறார். இது அவரது தனிப்பட்ட விருப்பம். அதேநேரத்தில், கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன, ஆனால் அவை கூட்டணிக்கோ அல்லது எங்கள் உறவுகளுக்கோ அச்சுறுத்தலாக இல்லை” என்று கூறினார்.

ALSO READ: பாமக யாருடன் கூட்டணி? பொதுக்குழு மேடையிலேயே சொன்ன அன்புமணி

ஆணவக் கொலை குறித்து பேசிய திருமாவளவன்:

சென்னையில் ஆணவக் கொலை குறித்து கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், “கோபி, சுதாகர் ரொம்ப நேர்மையாக கருத்து சொல்லியிருக்கிறார்கள். அந்த பிள்ளைகளுக்கு எந்த விருது கொடுத்தாலும் பொருந்தும். எந்த ஜாதியையும் மனதில் வைத்து பேசவில்லை. அவர்களை மிரட்டி அந்த வீடியோவை டெலிட் செய்ய சொல்லிவிட்டார்கள். நம்முடைய அணியினர் இதை செய்திருந்தால் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியிருக்கும். நல்லவேளை அந்த பசங்க தலித் அடையாளம் இல்லாதவர்கள் போல, அப்படி என்று நினைக்கிறேன். இதையெல்லாம் கண்காணிப்பதற்கு ஒரு நுண்ணறிவு பிரிவு தேவை.” என்று தெரிவித்தார்.