சென்னையில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
Ungaludan Stalin camp Chennai: சென்னையில் இன்று 2025 ஜூலை 23 6 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடக்கின்றன. முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் நேரில் கலந்து கொண்டு அரசு சேவைகளைப் பெறலாம்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்கம்
சென்னை ஜூலை 23: சென்னையில் இன்று (2025 ஜூலை 23) “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் 6 வார்டுகளில் நடைபெறுகின்றன. மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் மண்டலங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன. தியா திருமண மண்டபம், சமூக நலக்கூடம், பள்ளிகள், வாகன நிறுத்தம் போன்ற இடங்களில் முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை நேரில் அளித்து உடனடி தீர்வு பெறலாம்.
6 வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கியுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், மக்களின் பிரச்சனைகள், கோரிக்கைகள் மற்றும் புகார்களை நேரில் சென்று கேட்டறிந்து தீர்வு காணும் முகாம்கள், இன்று (ஜூலை 23, 2025, புதன்கிழமை) மாநகராட்சியின் 6 வார்டுகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாம்கள், பொதுமக்களுக்கு நேரடி சேவைகள் வழங்கும் நோக்கில் நடத்தப்படுகின்றன. இம்முகாம்கள் நடைபெறும் இடங்கள் வருமாறு:
Also Read: குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் அட்டைப்பெட்டியில் பெறப்படவில்லை.
6 வார்டுகளில் விவரங்கள் அறிவிப்பு
மாதவரம் மண்டலத்திலுள்ள வார்டு-24ல், புனித அந்தோணி நகர், ஜி.என்.டி சாலையில் அமைந்துள்ள தியா திருமண மண்டபம் ஒன்றில் முகாம் நடைபெறும். அதேபோல் தண்டையார்பேட்டை மண்டலத்திலுள்ள வார்டு-41ல், மணலி சாலையில் அமைந்துள்ள எச்.6 காவல் நிலையம் அருகே உள்ள பாரத் பெட்ரோல் பேங்க் வாகன நிறுத்த இடத்தில் முகாம் நடைபெற உள்ளது.
திரு.வி.க. நகர் மண்டலத்தின் வார்டு-74ல், பெரம்பூர் மல்லிகாபுரம் கிருஷ்ணதாஸ் பிரதான சாலையில் அமைந்துள்ள சென்னை தொடக்கப் பள்ளி வளாகத்தில் முகாம் நடைபெறவுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்திலுள்ள வார்டு-111ல் மாதிரி பள்ளிச் சாலையில் அமைந்துள்ள சமூக நலக்கூடம், இந்த முகாமுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
வளசரவாக்கம் மண்டலத்தில், வார்டு-148ல் நெற்குன்றம் பகுதியில் அமைந்துள்ள என்.டி. பட்டேல் சாலையில் உள்ள ஜி.எம். மஹால் வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெறும். அதேபோன்று சோழிங்கநல்லூர் மண்டலத்திலுள்ள வார்டு-194ல், ஈஞ்சம்பாக்கம் கைலாஷ் கார்டனில் முகாம் நடைபெற உள்ளது.
புகார்களை பொதுமக்கள் நேரடியாக அதிகாரிகளிடம் அளிக்கல
இந்த முகாம்கள் வழியாக, குடிநீர், சாலை, கழிவு நீர், தெரு விளக்குகள், குடிசை மாற்று, வரிவிதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் நேரடியாக அதிகாரிகளிடம் பதிவு செய்ய முடியும். மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, வருவாய் துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து முகாம்களில் பங்கேற்கவுள்ளன.
அதிக சிக்கலான பிரச்சனைகளும், தனிப்பட்ட கோரிக்கைகளும் முதல்வருக்கே நேரடியாக அனுப்பப்படும் வகையில் பதிவு செய்யப்படும். எனவே, தங்கள் பகுதியில் நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று அரசு சேவைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.