சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவர்கள் பரிதாப பலி…. சோகத்தில் மூழ்கிய கிராமம்
School Students Killed: : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பழுதடைந்த வீட்டை இடிக்கும் பணியின் போது திடீரென பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரி புகைப்படம்
திருவண்ணாமலை, பிப்ரவரி 13 :திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பழுதடைந்த வீட்டை இடிக்கும் பணியின் போது திடீரென பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வந்தவாசி அருகே வழுவூர் என்ற பகுதியில் உள்ள புது காலனியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன்களில் ஒருவரான அபிநேஷ் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பும்,மற்றொரு மகன் முகேஷ் 11 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் இலவங்காடு என்ற கிராமத்தில் உள்ள தங்களது தாத்தா வீட்டுக்கு சென்றிருந்தனர்.
வீடு இடிக்கும் பணியின்போது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் மரணம்
இந்த நிலையில் அபிநேஷ் மற்றும் முகேஷின் மாமா ஸ்ரீராம் பழுதடைந்த தங்களது வீட்டை இடித்து புது வீடு கட்ட திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் வீட்டின் மீது ஏறி வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சுவரின் அருகில் நின்றிருந்த அபிநேஷ் மற்றும் முகேஷ் மற்றும் அவர்களது மாமா ஸ்ரீராம் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர்.
இதையும் படிக்க : திருச்சிக்கு அருகே “குட்டி ஊட்டியா”…பிரம்மிக்க வைக்கும் சுற்றுலா தளம்..வெறும் 3 மணி நேர பயணம் தான்!
இதனையடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அ்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் மர்றும் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில் ஸ்ரீராம் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் மாணவர்கள் முகேஷ் மற்றும் அபிநேஷ் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : வீடுகளில் நாய் வளர்க்கிறீர்களா…ரூ.5000 அபராதம்…சென்னை மாநகராட்சியின் புதிய உத்தரவு!
வீடு இடிக்கும் பணி முறையாக மேற்கொள்ளப்பட்டதா?
தாத்தா வீட்டிற்கு சென்றிருந்த மாணவர்கள் இருவர் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒட்டு மொத்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து வீடு இடிக்கும் முறையாக மேற்கொள்ளப்பட்டதா? அதற்காக முறையான அனுமதி பெறப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்றதா என கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பொதுவாக பழைய வீடுகளை இடிக்கும்போது முறையான அனுமதி பெற்று உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற வேண்டும் என்பது விதி. பழைய வீடுகளின் சுவர்கள் வலுவற்று சேதமடைந்து நிலையில் இருக்கும் என்பதால் அதனை இடிப்பதற்கு முன் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியது கட்டாயம்.