28 Jan 2025

தடையை மீறி திருவண்ணாமலை மலைக்கு சென்ற அர்ச்சனா ? 

Credit: Instagram

ராஜாராணி சீசன் 2 தொடரின் மூலம் மக்களிடையே பிரபமானவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா, தேன்மொழி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் மொரட்டு சிங்கிள் சீசன் 2, காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

சிறப்பாக செயல்பட்டு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதனால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.  

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதியுடன் டிமாண்டி காலனி 2 படத்தில் அறிமுகமானர்.  தற்போது டிமாண்டி காலனி 3 படத்தில் நடித்து வருகிறார்.

சின்னத்திரை நடிகர் அருண் பிரசாத்தை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்.  இருவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மலைக்கு சென்றதாக அவர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்படும் நிலையில், அது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.