பெண்ணின் வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே செல்ல முயன்ற நபர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
Two Men Tried to Get Inside The Woman House | திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் பெண் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், இரவு நேரத்தின் அந்த பெண்ணின் வீட்டின் மேற்கூரையை உடைத்துக்கொண்டு இரண்டு ஆண்கள் உள்ளே செல்ல முயற்சி செய்துள்ளனர்.

மாதிரி புகைப்படம்
திசையன்விளை, நவம்பர் 11 : திருநெல்வேலி (Tirunelveli) மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 33 வயது பெண். இவரது கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவர் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், நவம்பர் 09, 2205 அன்று அந்த பெண் தனது இரண்டு மகள்களுடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு நடைபெற்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் மேற்கூரையை பிரித்துக்கொண்டு உள்ளே செல்ல முயற்சி செய்த நபர்கள்
அந்த பெண் தனது மகள்களுடன் நல்ல தூக்கத்தில் இருந்த போது, இரண்டு மர்ம நபர்கள் அவரது வீட்டின் மேற்கூரையின் மீது ஏறியுள்ளனர். அவர்கள் வீட்டின் மேற்கூரையில் இருந்த ஓடுகளை பிரித்து உள்ளே குதிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை கண்டு அந்த பெண் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், அவர் உடனடியாக திருடன் திருடன் என கத்தி கூச்சலிட தொடங்கியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருக்கும் பொதும்மக்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு ஓடி வந்துள்ளனர்.
இதையும் படிங்க : டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி.. சென்னையில் பலத்த பாதுகாப்பு!
வீட்டிற்குள் நுழைய முயன்ற நபர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
சம்பவ இடத்திற்கு ஓடி வந்த பொதுமக்கள் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைய முயன்ற இரண்டு பேரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அப்போது அவர்கள் இருவரும் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது ரஞ்சித் என்ற இளைஞரும், 29 வயது ராஜேஷ்குமார் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த இரண்டு இளைஞர்களையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க : கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்த 5 சிறுவர்கள்.. ஒரு லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய நயினார் பாலாஜி
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த இளைஞர்கள் பெண்ணின் வீட்டின் மேற்கூரையை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றது ஏன் என்பது தொடர்பாக விசாரணை மெற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.