727 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி மற்றும் மைக்ரோசிப்.. தவறவிட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?
Chennai Pets Free Vaccine Camp: சென்னையில் 6 செல்லப்பிராணி சிகிச்சை மையங்கள் இலவசமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருவிகா நகர், புளியந்தோப்பு, லாயட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இந்த மையங்கள் இயக்கப்படுகின்றன. இந்த இடங்களில் செல்லப்பிராணிகளுக்கான இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
சென்னை, நவம்பர் 9, 2025: சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நவம்பர் 9, 2025 தேதியான இன்று நடைபெற்றது. அதில் சுமார் 767 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தெருநாய் தொல்லைகள் ஒரு பக்கம் இருந்தாலும், வளர்ப்பு நாய்களை வைத்திருப்பவர்கள் கட்டாயமாக உரிமம் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உரிமம் பெறாதவர்கள் ரூ. 5,000 வரை அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் நவம்பர் 24, 2025க்குள் செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் உரிமம் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்:
இந்த பணிகளை எளிதாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி தரப்பில் பல்வேறு இடங்களில் இலவச முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998, பிரிவு 292ன் படி, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செல்லப்பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள், அவற்றுக்கான உரிமம் பெறுவது கட்டாயமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளுக்கான உரிமம், உரிமையாளர்கள் இணையதளம் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.
இது ஒரு பக்கம் இருக்க, சென்னையில் 6 செல்லப்பிராணி சிகிச்சை மையங்கள் இலவசமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருவிகா நகர், புளியந்தோப்பு, லாயட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இந்த மையங்கள் இயக்கப்படுகின்றன.
மேலும் படிக்க: விமானத்தில் நடுவானில் மயங்கிய பயணி.. உயிரை காக்க போராடிய மருத்துவர்கள்.. திடுக் நிமிடங்கள்!!
செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள், அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 2025 நவம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த மையங்களில் சேவை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
727 செல்லப்பிராணிகளுக்கு உரிமம்:
இன்று (9.11.25) பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சை மையங்களில் நடைபெற்ற முகாமில் செல்லப் பிராணிகளுக்கு வெறி நாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோ சிப் பொருத்துதல் மற்றும் உரிமம் வழங்குதல் பணி மேற்கொள்ளப்பட்டது… pic.twitter.com/ww1Bn28dmN
— Greater Chennai Corporation (@chennaicorp) November 9, 2025
அந்த வகையில் நவம்பர் 9, 2025 தேதியான இன்று இந்த ஆறு மையங்களிலும் இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 727 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோசிப் பொருத்தி, உரிமம் வழங்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நாளை முதல் தாம்பரம் – எழும்பூர் இடையே ரயில் சேவை ரத்து.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
இன்று தவறவிட்ட உரிமையாளர்கள் வரவிருக்கும் 2025 நவம்பர் 16 மற்றும் நவம்பர் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் முகாம்களுக்கு சென்று பயன் பெறலாம். இந்த முகாம்களில் உரிமம் மற்றும் தடுப்பூசி செலுத்த தவறிய உரிமையாளர்கள் 2025 நவம்பர் 24க்குள் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தனியார் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ இதனை அவர்கள் செய்திருக்க வேண்டும். இல்லையெனில், ஆய்வில் உரிமம் பெறாத உரிமையாளர்கள் மீது ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.