“வாயிலேயே வடை சுடுகிறார் விஜய்”.. செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!!

இத்தனை நாட்கள் தவெக குறித்து விமர்சிப்பதை தவிர்த்து வந்த அதிமுக, தற்போது தீவிரமாக விமர்சிக்க தொடங்கியுள்ளது. நேற்று நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் அதிமுகவை விமர்சிக்க, அதிமுகவும் பதிலுக்கு பனையூர் பண்ணையார் என விஜய்யை விமர்ச்சித்து வருகிறது. அதோடு, கரூர் விவகாரத்தை குறிப்பிட்டும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

வாயிலேயே வடை சுடுகிறார் விஜய்.. செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

26 Jan 2026 15:15 PM

 IST

மதுரை, ஜனவரி 26: குடும்பத்தில் ஒரு ஓட்டு உள்ளது என விஜய் கூறுவது வாயிலேயே வடை சுடுவதைப் போன்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பல்வேறு கட்ட பணிகளில் மும்மூரமாக செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில், அதிமுக ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான அதிமுக ஆட்சியை பிடிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூ கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் என பல கட்சிகள் வரிசை கட்டி நிற்கின்றன.

மேலும் படிக்க: சென்னையில் இடைவிடாது கொட்டும் மழை.. இன்று எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை ரிப்போர்ட்..

தவெக தனித்துப்போட்டி?

எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக, அன்புமணி தரப்பு பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இதுபோக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. இதனால், விஜய்யின் தவெக இத்தேர்தலை தனித்து சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மட்டும் இன்னும் குளப்ப நிலையில் உள்ளதாக தெரிகிறது. தற்போது வரை தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவிக்கும் ஒரே கட்சியாக காங்கிரஸ் மட்டுமே இருந்து வருகிறது. அக்கட்சியும் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்துவிட்டால், தவெக தனித்துதான் போட்டியிட வேண்டும்.

தவெகவை கடுமையாக விமர்சிக்கும் அதிமுக:

இந்த சூழலில் இத்தனை நாட்கள் தவெக குறித்து விமர்சிப்பதை தவிர்த்து வந்த அதிமுக, தற்போது தீவிரமாக விமர்சிக்க தொடங்கியுள்ளது. நேற்று நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் அதிமுகவை விமர்சிக்க, அதிமுகவும் பதிலுக்கு பனையூர் பண்ணையார் என விஜய்யை விமர்ச்சித்து வருகிறது. அதோடு, கரூர் விவகாரத்தை குறிப்பிட்டும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அறையில் உட்கார்ந்து அரசியல் செய்யும் விஜய்:

அந்தவகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் கரூர் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சென்னைக்கு அழைத்து விஜய் ஆறுதல் கூறியதை விமர்சித்துள்ளார். இந்த கட்சி எல்லாம் இருக்குமா என்றும், இதற்கு கமல்ஹாசனே பரவாயில்லை என்றும் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். இது தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, நடிகர் என்ற முகத்தை வைத்து வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள். நடிகர் என்பதால் கூட்டம் கூடுகிறது. நடிகர் என்ற மாஸ் மட்டுமே எடப்பாடிக்கு இல்லையே தவிர, மக்கள் எங்களுக்காக கூடுகிறார்கள். விஜய் அறையில் உட்கார்ந்து அரசியல் செய்கிறார், களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும்.

வாயில் வடை சுடும் விஜய்:

ஒவ்வொரு வீட்டிலும் தவெகவுக்கு வாக்கு இருப்பதாக விஜய் கூறுவது வாயில் வடை சுடுவதை போன்றது. குடும்பத்தில் ஒரு ஓட்டு உள்ளது என எத்தனை வீடுகளில் விஜய் கணக்கெடுத்தார்? புதுமுகம் ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என நினைத்தேன். ஆனால் விஜய் எங்கள் காதை கடிக்கிறார். ஆதவ் அர்ஜுனாவை வைத்துக் கொண்டு ஊழல் பற்றி விஜய் பேசுவது வேடிக்கையான விஷயம். தமிழ்நாட்டில் அதிமுக-திமுக இடையேதான் போட்டி என்று அவர் கூறினார்.

அரசியலை விட்டே போய்விடலாம்:

மேலும் பேசிய அவர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை பண்ணை வீட்டுக்கு கூப்பிட்டு இரங்கல் தெரிவிக்கிறார். இது என்ன புதிதாக இருக்கிறது. விஜய்யின் அழிச்சாட்டியத்தை பார்த்தால் அரசியலே விட்டே போய்விடலாம் என தோன்றுகிறது. ஒருவர் இரங்கல் தெரிவிக்க இப்படியா செய்வார்வார்கள், இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று தான் எல்லாரும் இரங்கல் தெரிவிப்பார்கள்.

மேலும் படிக்க: தஞ்சையில் நடக்கும் வெல்லும் தமிழ் பெண்கள் திமுக மகளிர் அணி மாநாடு.. சிறப்பு ஏற்பாடுகள் என்ன?

ஆனால், அவரை பார்க்க தான் அந்த மக்கள் அங்கே வந்திருந்தார்கள். இப்பவே இப்படி செய்தால், பின்னால் எப்படி இருக்குமோ. இந்த கட்சி எல்லாம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?. எனக்கு என்னவோ சான்ஸ் இல்லையென்று தோன்றுகிது. இதற்கு கமல்ஹாசன் கூட பரவாயில்லையே என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?