விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விஜய் – 20 நிமிடம் தாமதமாக கிளம்பிய விமானம் – என்ன நடந்தது?

Vijay Stopped at Airport : கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக 3வது முறையா சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக விமான நிலையம் வந்த அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விஜய் - 20 நிமிடம் தாமதமாக கிளம்பிய விமானம் - என்ன நடந்தது?

விஜய்

Updated On: 

14 Mar 2026 19:38 PM

 IST

சென்னை, மார்ச் 14: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக 3வது முறையா சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மார்ச் 14, 2026 அன்று மதியம் 3 மணியளவில் விஜய் தனி விமானம் மூலம் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஜய் சென்னை விமான நிலையம் வந்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோரும் உடனிருந்தனர். இந்த நிலையில் அவர்களது உடமைகள் பரிசோதனைக்கு உட்பட்ட போது, விஜய்யின் கைப்பையில் இருந்து கத்தரிக்கோல் கண்டறியப்பட்டுள்ளது.

விஜய்யின் பையில் இருந்த கத்தரிக்கோல்

இதனையடுத்து அதனை அப்புறப்படுத்திய பிறகு தான் விமானத்தில் பயணிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விமானம் புறப்பட 40 நிமிடங்கள் தாமதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் இருந்தோ, அல்லது தவெக தரப்பில் இருந்தோ எவ்வித விளக்கமோ அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : சிலிண்டர் தட்டுப்பாடு: கோயம்பேடு வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு.. என்ன நடந்தது?

டெல்லியில் விஜய்

 

டெல்லி பயணத்தின் போது விஜய்யுடன் தவெக நிர்வாகிகள் நிர்மல் குமார், ஜெகதீஷ் உள்ளிட்டோர் உடன் சென்றதாக கூறப்படுகிறது. கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது 41 பேர் உயிரிழந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்புடி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த ஜனவரி 12 மற்றும் 19, 2026 ஆகிய தேதிகளில் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

இதையும் படிக்க : கரூர் வழக்கு.. டெல்லி புறப்பட்ட விஜய்.. சிபிஐ விசாரணைக்கு மத்தியில் கூட்டணி பேச்சுவார்த்தை?

இந்த நிலையில் 3வது முறையாக கடந்த மார்ச் 10, 2026 அன்று விஜய் ஆஜராக சிபிஐ அழைப்பு விடுத்திருதது. ஆனால் அன்றைய தினம் தவெக வேட்பாளர் நேர்காணல் இருப்பதால வேறொரு தினத்தில் ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 15, 2026 அன்று ஆஜராக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று விஜய் தற்போது டெல்லி சென்றுள்ளார். அப்போது பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து கூட்டணி குறித்து உரையாடவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட பெண் உயிரோடு வந்ததால் பரபரப்பு - பிலிபித்தில் நடந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் விளக்கம்”
எரிவாயு தட்டுப்பாடு.. சிறிய உணவகங்கள் மூடல், கருப்புச் சந்தையில் சிலிண்டர் ரூ.3000 வரை உயர்வு..
ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்ல இந்தியாவுக்கு அனுமதி.. வெளிய்றவுத்துறை அமைச்சர் சொன்ன விஷயம்..
ஈராக் அருகே எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு