Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தல்..

TVK Leader Vijay: மீனவர்களை கைது செய்வதும், மிரட்டுவதும், படகுகளை சேதப்படுத்தி பறிமுதல் செய்வதும் என இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நிரந்தர தீர்வு வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Nov 2025 16:28 PM IST

சென்னை, நவம்பர் 3, 2025: தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 2, 2025 காலை, 500 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500 -க்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கட்சி தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள் துப்பாக்கி முனையில் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் முரட்டுத்தனமாக விரட்டி அடித்துள்ளனர்.

மீன்பிடிக்காமல் கரைக்கு திரும்பிய மீனவர்கள், “ஒவ்வொரு படகுக்கும் ரூ. 10,000 முதல் ரூ. 50,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர். இதனிடையே, மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000: உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூப்பர் அப்டேட்!!

35 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்:

இதுவொரு பக்கம் இருக்க, நவம்பர் 3, 2025 இன்று, மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 35 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதோடு நான்கு படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்களை கைது செய்வதும், மிரட்டுவதும், படகுகளை சேதப்படுத்தி பறிமுதல் செய்வதும் என இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: கோவையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. பெண்கள் பாதுகாப்பை குழித்தோண்டி புதைத்த திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..

நிரந்தர தீர்வு காண வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய்:


அந்த வகையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், இதுகுறித்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் (X) வலைதளப் பக்கம் பதிவில், “ கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும்.

மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் கோரிக்கை:

மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் சேதப்படுத்தப்படுவதும், மீனவர்கள் படகுகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிரந்தர தீர்வு கொண்டு வர வேண்டும், என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.