Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழக மீனவர்கள் 35 பேர் சிறைபிடிப்பு.. இலங்கை கடற்படை அட்டூழியம்!

Fishermen arrest: கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் தரப்பிலும் இந்த விவகாரத்திற்கு தீர்வுகான எவ்வளவோ கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அரசால் தற்போது வரை சுமூக உடன்படிக்கை எட்ட முடியாமல் உள்ளது.

தமிழக மீனவர்கள் 35 பேர் சிறைபிடிப்பு.. இலங்கை கடற்படை அட்டூழியம்!
Fisherman Arrested
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 03 Nov 2025 08:31 AM IST

தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக நேற்றைய தினம் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கி முனையில் அவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி, அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால், மீன்பிடிக்க முடியாமல் கரைக்கு திரும்பிய மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக வேதனை தெரிவித்திருந்தனர்.

துப்பாக்கி முனையில் மீனவர்களுக்கு மிரட்டல்:

அதாவது, நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடக்க சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள் துப்பாக்கி முனையில் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் மிரட்டி திரும்ப செல்லுமாறு விரட்டியடித்துள்ளனர். வேறு வழியின்று உயிருக்கு பயந்து மீனவர்கள் கரைக்கு திரும்பியுள்ளனர்.

இதனால், மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பிய மீனவர்களுக்கு படகு ஒன்றுக்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். இதனிடையே, மீனவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

35 தமிழக மீனவர்கள் கைது:

இந்நிலையில், இன்று காலை மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 35 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அதோடு, மீனவர்களின் 4 படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறைபடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தற்போது தெரியவில்லை. இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை மொத்தம் 324 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீனவர்களை அத்துமீறி கைது செய்வதை வாடிக்கையாக இலங்கை கடற்படை கொண்டுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் இதற்கு நிரந்திர தீர்வு மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.