Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோவையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. பெண்கள் பாதுகாப்பை குழித்தோண்டி புதைத்த திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..

Edappadi Palaniswami: தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “பெண்கள் பாதுகாப்பை குழி தோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கண்டனம்,” என குறிப்பிட்டுள்ளார்.

கோவையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. பெண்கள் பாதுகாப்பை குழித்தோண்டி புதைத்த திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..
எடப்பாடி பழனிசாமி
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Nov 2025 15:08 PM IST

சென்னை, நவம்பர் 3, 2025: கோவையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூவர் அந்த ஆண் நண்பரை கடுமையாக தாக்கி, அந்த மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளனர். இதையடுத்து, அந்த இளைஞர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அந்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அருகிலுள்ள பகுதியில் அந்த பெண் சுயநினைவின்றி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “பெண்கள் பாதுகாப்பை குழி தோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கண்டனம்,” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: கல்லூரி மாணவிக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தையே உலுக்கும் திடுக் சம்பவம்!!

7 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை:

காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டபோது, மூவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, ஏழு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்; மேலும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த மூன்று நபர்கள்மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி:


இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (X) வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ” பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

அஇஅதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது.

மேலும் படிக்க: அரசியல் பொதுக்கூட்ட விதிமுறை: நவ.6ல் அனைத்துக் கட்சி கூட்டம்!!

தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும்:

விடியா திமுக அரசு பெண்களை பாதுகாக்கும் என்று நம்ப வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்பு அஇஅதிமுக சார்பில் கண்களில் Pepper Spray அடிக்கும் கருவி, டார்ச், உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை நான் சென்னையில் தலைமைக் கழகத்தில் துவக்கி வைத்தேன்.

தொடர்ந்து கழக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் வழங்கினர். விடியா திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.