Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி…முன்னேற்பாடுகள் தீவிரம்!

Tvk Leader Vijay Public Meeting: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஈரோட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்துக்கான பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் , என்னென்ன முன்னேற்பாடுகள் என்பதை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம் .

ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி…முன்னேற்பாடுகள் தீவிரம்!
விஜய் மக்கள் சந்திப்பு முன்னேற்பாடுகள்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 16 Dec 2025 15:58 PM IST

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள பெருந்துறை பகுதியில் வருகிற வியாழக்கிழமை (டிசம்பர் 18) மக்கள் சந்திப்பு பரப்புரை பயணம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தவெக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வர உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக 16 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் வசதிக்காக இரும்பு தடுப்புகள் மூலம் பட்டிகள் அமைக்கும் பணி, போலீசார் கூட்டத்தை கண்காணிக்கும் வகையில் தற்காலி அறைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன. நிகழ்ச்சிக்கு வருபவர்களின் வசதிக்காக 20 தண்ணீர் தொட்டிகள், கழிப்பறை வசதிகள், அவசர தேவைக்காக 20 ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.

20 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம்

பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள், நிலத்தை சமன் செய்து தரை விரிப்புகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கூட்டத்துக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு வரும் பொது மக்கள் மற்றும் தொண்டர்களின் வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டருக்கு முன்னதாக நிறுத்தப்பட்டு அங்கிருந்து மாற்றுப்பாதை வழியாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

மேலும் படிக்க: அதிமுகவின் ஒரே எதிரி திமுக…திமுக…திமுக…ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!

300 வேலை ஆள்கள் மூலம் நடைபெறும் பணி

மேலும், இவர்கள் வந்து செல்வதற்காக நான்கு திசைகளிலும், நான்கு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. பரப்புரை நிகழ்ச்சி நடைபெறும் பகுதியை சுற்றிலும் இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 300 வேலை ஆட்கள் மூலம் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சிக்கு ஈரோட்டைச் சேர்ந்த கட்சியினர் தவிற வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் இருந்து சுமார் 25,000 பேர் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ளனர். இவர்களை தவிர 10,000 மேற்பட்ட பொதுமக்களும் வருகை தர உள்ளனர்.

தவெகவினருக்கு காவல் துறை அறிவுறுத்தல்

இது தொடர்பாக காவல்துறை சார்பில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் கட்சியினர், பொதுமக்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. மரங்கள் மற்றும் வீடுகளின் மீது ஏறக்கூடாது. மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் பகுதிக்கு அருகே நெடுஞ்சாலை இருப்பதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஈடுபடக்கூடாது என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: 2026 சட்டமன்ற தேர்தல்…தவெக-பாஜகவுக்கு…வைகோ மறைமுக எச்சரிக்கை!