விஜய் – சங்கீதா விவகாரத்து வழக்கு.. விசாரணை தொடங்கிய சில நிமிடங்களில் நீதிபதி திடீர் உத்தரவு!
Vijay Divorce Case: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவரது மனைவி சங்கீதா விவகாரத்து வழக்கு விசாரணையை ஜூன் 15- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. அன்றைய தினம் இருவரும் நேரில் ஆஜராக உள்ளனர்.

விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா கடந்த பிப்ரவரி 24- ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், எனது கணவரும், தமிழக வெற்றிக் கழத்தின் தலைவருமான விஜய் வேறொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வருகிறார். இது தொடர்பாக நான் அவரிடம் கேட்டும், அவர் அந்த உறவை துண்டிக்கவில்லை. முறையான பதிலும் அளிக்கவில்லை. இந்த விவகாரம் ஒரு கட்டத்தை மீறி சென்று விட்டது. எனவே, விஜயிடம் இருந்து விவாகரத்து பெற விரும்புகிறேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று திங்கள் கிழமை ( ஏப்ரல் 20) நடைபெற்றது. இதில், முதல் கட்ட விசாரணை என்பதால் தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறும், அதற்கு பதிலாக வீடியோ அழைப்பில் ஆஜராக அனுமதி அளிக்குமாறு விஜய் தரப்பிலிருந்து நீதிமன்றத்துக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.
ஜூன் 15- ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு
இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்களுக்கு பதிலாக அவர்களின் வக்கீல்கள் ஆஜராகி இருந்தனர். அப்போது, அவர்களிடம் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோர் எப்போது, எந்த நேரத்தில் ஆஜராக முடியும் என்பது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, ஜூன் 15- ஆம் தேதி விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் ஆஜராவார்கள் என்று வழக்கறிஞர்கள் பதில் அளித்தனர். அதன்படி, இந்த வழக்கானது ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வாக்காளர் அடையாளத்தில் சந்தேகம் உள்ளதா? ரூ.2 சேலஞ்ச் கட்டணம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஊடகங்களில் விவாதத்துக்கு தடை கோரி வழக்கு
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவானது பிப்ரவரி 26- ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி ஏப்ரல் 20- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றிருந்தது. மேலும், தற்போது நடைபெற்று வரும் விவகாரத்து வழக்கு குடும்பம் சார்ந்தது என்பதால், இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களில் விவாதம் மேற்கொள்ளக் கூடாது என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சங்கீதாவுக்கு விவகாரத்து கொடுக்க விஜய் முடிவு
இதனிடையே, விஜய் தனக்கு இடையூறு செய்தால் அந்த நடிகை குறித்த விவரங்களை வெளியிடுவேன் என்று சங்கீதா தெரிவித்திருந்தார். அத்துடன், சங்கீதாவுக்கு விஜய் விவகாரத்து கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ராகுல் காந்தியின் தமிழக வருகை.. ஸ்டாலினுக்காக அல்ல.. பாஜகவுக்காக.. அண்ணாமலை அதிரடி.