AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Thaai Kizhavi: தாய் கிழவி படம் போன்ற படத்தை பார்க்க ஆசையா? அப்போது இந்த தண்டட்டி படத்தை மிஸ் பண்ணிராதீங்க!

OTT Movie Reviews: தமிழ் சினிமாவில் இந்த 2026ம் ஆண்டில் தாய் கிழவி படமானது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அதே போல ஓடிடியிலும் இந்த படமானது நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படத்தை போலவே தமிழில் வெளியாகிய தண்டட்டி படத்தை பார்த்திருக்கீங்களா?.

Thaai Kizhavi: தாய் கிழவி படம் போன்ற படத்தை பார்க்க ஆசையா? அப்போது இந்த தண்டட்டி படத்தை மிஸ் பண்ணிராதீங்க!
தண்டட்டி திரைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 20 Apr 2026 08:32 AM IST

கோலிவுட் சினிமாவில் நடிகை ராதிகா சரத்குமாரின் (Radhika sarathkumar) நடிப்பில் வெளியான தாய் கிழவி (Thaai Kizhavi) படமானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்க, சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தயாரித்திருந்தார். ஒரு பெண்ணை மையமாக கொண்ட கதைக்களத்தில் வெளியான இப்படமானது, உலகளவு திரையரங்குகளில் சுமார் ரூ 80 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. மேலும் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் இப்படத்தை போலவே தமிழில் வெளியாகியிருந்த தண்டட்டி (Thandatti) படத்தை பார்த்திருக்கீங்களா? இயக்குநர் ராம் சங்கையா (Ram Sangaiah) இயக்கத்தில், நடிகர்கள் பசுபதி (Pasupathy), ரோகினி (Rohini), அம்மு அபிராமி (Ammu Abhirami), விவேக் பிரசன்னா போன்ற நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பி பெற்றிருந்தது. மேலும் தற்போது இப்படம் ஓடிடியில் உள்ளது. அந்த வகையில் இப்படத்தின் கதைக்களம் மற்றும் எந்த ஓடிடியில் உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஆர்.ஜே. பாலாஜியின் காமெடி நிறைந்த சிங்கப்பூர் சலூன் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? 

தண்டட்டி திரைப்படத்தின் கதைக்களம் மற்றும் ஓடிடி விவரம் :

இந்த தண்டட்டி படத்தில் நடிகை ரோகிணி “தங்கம்” என்ற வயதான பெண் வேடத்திலும், அவரின் இளமை வேடத்தில் அம்மு அபிராமி நடித்துள்ளார். மேலும் நடிகர் பசுபதி “வீர சுப்பிரமணி” என்ற வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கிடாரி என்ற கிராமத்தில் வசிக்கும், வயதான பெண் தங்கம் (ரோகிணி) காணாமல் போகிறார். அவர் காணாமல் போன நிலையில், போலீசில் புகார் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் காணாமல் போன ரோகிணியை தேடி, கான்ஸ்டபிள் வீர சுப்பிரமணி (பசுபதி) அலைகிறார். கிடாரி என்ற கிராமத்தில் ஒரு போலீஸ் அதிகாரியை எளிதாக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

இதையும் படிங்க: ‘தேசிய விருது உனக்கு வரணும்’.. தாய் கிழவி படத்தை பார்த்து ராதிகாவை பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா!

ஆனால் பசுபதி அந்த கிராமத்தில் அனுமதிக்கட்டது, ரோகிணியை தேடும் பணியில் இருப்பார். அவ்வாறு தேடும்போது வயதான பெண்ணாக நடித்த ரோகிணி இறந்திருப்பார். அவ்வாறு அவர் இறந்தபிறகு, அவரின் மகள் மற்றும் மகன் அவரிடம் இருந்த சொத்தை பிரித்தபிறகு, காதில் உள்ள தண்டட்டி மட்டும் மீதி இருக்கும். அதே சமயத்தில் தண்டட்டி காணாமல் போய்விடும், அவ்வாறு காணாமல் போன தண்டட்டியை பசுபதி கண்டுபிடித்தாரா? அந்த தங்கம் யார் என்பதே இப்படத்தின் மீதி கதையாகும்.

தண்டட்டி திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த பதிவு:

தண்டட்டி படம் எந்த ஓடிடியில், எத்தனை மணி நேரம் :

இந்த தண்டட்டி படமானது மொத்தம் 2 மணி நேரம் 3 நிமிடங்களை கொண்டது. திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது, அமேசான் பிரைம் ஓடிடி மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us