முழு ஆதரவு – ஆளுநரை சந்தித்து உரிமை கோரிய விஜய்

TVK Vijay : காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில் தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இதனையடுத்து தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிறது.

முழு ஆதரவு - ஆளுநரை சந்தித்து உரிமை கோரிய விஜய்

தவெக நிர்வாகிகளுடன் ஆளுநரை சந்தித்த விஜய்

Updated On: 

08 May 2026 20:18 PM

 IST

சென்னை, மே 8 : காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில் தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். இது தொடர்பாக தனது கட்சி நிர்வாகிகள் செங்கோட்டையன், ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் சென்று 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன் ஆதரவு கடிதங்களையும் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து விரைவில் தமிழ்நாட்டின் புதிய முதல்வராகிறார் விஜய் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த சட்டமன்ற தேர்தலில் புதிதாக களமிறங்கிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 108 தொகுதிகளில் வென்று சாதனை படைத்தது. தமிழக அரசியல் வரலாற்றில் இது புதிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த கட்சி நிர்வாகிகள் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லீம் லீக் கட்சிகள் ஆகிய கட்சிகளிடம் இருந்து ஆதரவு கோரியது.

இதையும் படிக்க : தவெகவுடன் கூட்டணி இல்லை, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு – கம்யூனிஸ்ட் கட்சிகள் பரபரப்பு தகவல்

ஆளுநரை சந்திக்க சென்ற விஜய்

 

இதனையடுத்து போதிய ஆதரவு இல்லாததை காரணம்  காட்டி அந்த கட்சி ஆட்சியமைக்க ஆளுநர் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் தற்போது விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்த நிலையில் மே 8, 2026 அன்று தமிழக ஆளுநரை சந்தித்து ஆதரவு கோரினார். ஆட்சியமைக்க தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்த நிலையில் தவெக ஆட்சியமைக்க ஆளுநர் ஒப்புதல் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : முதல்வராகும் விஜய்? தவெக ஆட்சியமைக்க விசிக வெளியில் இருந்து ஆதரவு?

இதனையடுத்து ஆட்சி பொறுப்பேற்க பதவியேற்பு விழாவை நடத்த அந்த கட்சி தீவிர ஏற்பாடுகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தவெகவிற்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு எனவு தவெகவுடன் கூட்டணியில் இல்லை எனவும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதனால் தவெக ஆட்சி நிலையற்ற நிலையில் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி