எஸ்ஐஆர் விவகாரம்… உச்சநீதிமன்றம் சென்ற தவெக – என்ன காரணம்?

TVK Moves Supreme Court : தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ள ஜனவரி 30, 2026 அன்று வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

எஸ்ஐஆர் விவகாரம்... உச்சநீதிமன்றம் சென்ற தவெக - என்ன காரணம்?

விஜய்

Published: 

19 Jan 2026 20:06 PM

 IST

சென்னை, ஜனவரி 19 : தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு திருத்தப் பணிகள் (SIR) ஜனவரி 30, 2026 அன்று வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் கால அவகாசம் வழங்கக் கோரி தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்காக வழங்கப்பட்ட காலம் போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்டு, மேலும் 20 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று தவெக தனது மனுவில் கோரியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், எஸ்ஐஆர் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த நிலையில் தான் தவெக எஸ்ஐஆர் பணிகளுக்கு கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தை அனுகியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம், பீகார் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் இந்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அதனைத் தொடர்ந்து சரிபார்ப்பு மற்றும் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சிறப்பு திருத்தப் பணிகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் மொத்தமாக 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : சிபிஐ விசாரணைக்கு ஆஜரான விஜய்.. கிடுக்குப்பிடி கேள்வி எழுப்பிய அதிகாரிகள்.. நாளையும் தொடருமா?

குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் மட்டும் 14,25,018 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு பட்டியலில் இடம்பெறவில்லை என்ற தகவல் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெயர் நீக்கப்பட்டவர்கள் மற்றும் சமீபத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்கள் தங்களது பெயர்களை சேர்க்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஜனவரி 18ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர். மேலும், இந்த விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரடியாக சமர்ப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு

மேலும், 2002 அல்லது 2005 ஆண்டுகளில் தங்களது பெயர் அல்லது பெற்றோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்திருந்தால், அந்த விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிடலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம்கள் மூலம் புதிய பெயர் சேர்த்தல், தவறுதலாக நீக்கப்பட்ட பெயர்களை மீண்டும் சேர்த்தல், முகவரி மாற்றம், இரட்டைப் பதிவுகளை நீக்குதல், தொகுதி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிக்க : உயர்நிலை மாணவர்களால் 2 ஆம் வகுப்பு பாடங்களைக் கூட படிக்க முடியவில்லை- ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

அறிவிக்கப்பட்ட கடைசி நாள் முடிவடைந்த நிலையில், அதிகாரப்பூர்வ தகவலின்படி 13,03,487 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்ததாகவும், 35,646 பேர் வரைவு பட்டியலுக்கு எதிராக படிவம் 7 மூலம் எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்ததாகவும் அறிவிக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வாக்காளர் பதிவு கால அவகாசம் ஜனவரி 30, 2026 வரை நீட்டிக்கப்பட்டது.

எனினும், இந்த கால அவகாசம் போதுமானதாக இல்லை என்றும், இன்னும் பலர் விண்ணப்பிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறி, தவெக அதிருப்தி தெரிவித்துள்ளது. இதையடுத்து, வாக்காளர் பதிவு பணிகளுக்காக பிப்ரவரி 9, 2026 அன்று வரை கூடுதல் 20 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரி, தவெக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பான அரசியல் மற்றும் சட்டரீதியான விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..