Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பைக் மீது லோடு ஆட்டோ உரசியதால் மோதல்.. 5 பேருக்கு அரிவாள் வெட்டு!

Minor Accident Sparks Violent Clash in Tiruchendur | தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், பைக் மீது லோடு ஆட்டோ உரசிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 5 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த மோதல் சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பைக் மீது லோடு ஆட்டோ உரசியதால் மோதல்.. 5 பேருக்கு அரிவாள் வெட்டு!
விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 22 Apr 2025 08:43 AM

திருச்செந்தூர், ஏப்ரல் 22 : தூத்துக்குடியில் (Tuticorin) இரு சக்கர வாகனம் மீது லோடு ஆட்டோ உரிசிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதம் காரணமாக, 5 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்டோர் இந்த மோதலில் ஈடுபட்டதன் காரணமாக அந்த பகுதியே கலவர பூமியாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பைக் மீது லோடு ஆட்டோ உரசிய விவகாரம் இவ்வளவு பெரிய கலவரமாக வெடித்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கலவரமாக மாறிய பைக் விவகாரம் – திருச்செந்தூரில் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை (Tiruchendur) சேர்ந்தவர் கண்ணன். இவர் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்தற்காக ஏப்ரல் 20, 2025 அன்று சோனகன்விளை அருகே உள்ள நீல்புரம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஜெபராஜ் என்பவரின் இரு சக்கர வாகனம் மீது கண்ணனின் லோடு வாகனம் உரசியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெபராஜ், கண்ணனை தாக்கியுள்ளார். இதன் காரணமாக கண்ணன் தனது ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு ஜெபராஜிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளார். ஆனால, அப்போது ஏபட்ட கைகலப்பு காரணமாக ஜெபராஜ் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக ஜெபராஜின் மகன் நவீன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் நின்றுக்கொண்டிருப்பதை கண்ட அவர், தனது ஆதரவாரளர்கள் 40 பேரை அழைத்துக் கொண்டு அங்கு சென்றுள்ளார். அப்போது இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டுள்ளனர். அவர்கள் அரிவாள், கம்பு, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக மோதிக்கொண்டு உள்ளனனர். இதன் காரணமாக பலர் காயமடைந்த நிலையில், சிலருக்கு அரிவாள் வெட்டும் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பினர் இடையே மோதல் – 5 பேருக்கு அரிவாள் வெட்டு

இந்த கடுமையான மோதலில் கந்தவேல் (வயது 21), ஆனந்த் (வயது 20), ஆண்ட்ரூஸ் நவீன் (வயது 32), பிரகாஷ் (வயது 27) ஆகியோர் அரிவாளால் வெப்பட்டப்பதில் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பைக் மீது லோடு வாகனம் உரசிய விவகாரத்தில் ஜெயபராஜ் உள்ளிட்ட 5 பேருக்கு அரிவாள் வெட்டி ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெயிலால் ஏற்படும் தோல் எரிச்சல்... டாக்டர் சொல்லும் அறிவுரை!
வெயிலால் ஏற்படும் தோல் எரிச்சல்... டாக்டர் சொல்லும் அறிவுரை!...
கோடையில் நீங்கள் சிக்கன் சாப்பிடுகிறீர்களா? பிரச்சனை உண்டாகும்!
கோடையில் நீங்கள் சிக்கன் சாப்பிடுகிறீர்களா? பிரச்சனை உண்டாகும்!...
குங்ஃபூவை பயன்படுத்தி திருடனை வீழ்த்திய இளைஞர் - வைரல் வீடியோ
குங்ஃபூவை பயன்படுத்தி திருடனை வீழ்த்திய இளைஞர் - வைரல் வீடியோ...
Amazon Great Summer Sale - டாப் 5 ஏசி பிராண்டுகள்!
Amazon Great Summer Sale - டாப் 5 ஏசி பிராண்டுகள்!...
காதலில் விழுந்த ஷிகர் தவான்! பெண் புகைப்படத்துடன் வெளியான அப்டேட்
காதலில் விழுந்த ஷிகர் தவான்! பெண் புகைப்படத்துடன் வெளியான அப்டேட்...
இளைஞருக்கு குளிரை சூடாகவும், சூடானவை குளிராகவும் உணரும் நோய்!
இளைஞருக்கு குளிரை சூடாகவும், சூடானவை குளிராகவும் உணரும் நோய்!...
பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? எளிதாக இப்படி செய்து பாருங்க!
பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? எளிதாக இப்படி செய்து பாருங்க!...
தியேட்டரில் புகைபிடிக்கும் எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும்
தியேட்டரில் புகைபிடிக்கும் எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும்...
யாருடன் கூட்டணி ? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?
யாருடன் கூட்டணி ? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?...
விஜய்யின் பேச்சை கேட்காத ரசிகர்கள் - சேதமடைந்த வாகனம் !
விஜய்யின் பேச்சை கேட்காத ரசிகர்கள் - சேதமடைந்த வாகனம் !...
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகி இவரா?
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகி இவரா?...