தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விலகல்.. டிடிவி தினகரன் அறிவிப்பு..
TTV Dinakaran: பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அறிவித்துள்ளார். மேலும் தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பர் மாதம் தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக காட்டுமன்னார்கோவிலில் பேட்டி அளித்த பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விலகியதாக கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. அதாவது, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு கட்சிகள் நேருக்கு நேர் போட்டியிடவுள்ளன. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, அதிமுக மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், இந்த கூட்டணியால் அதிமுகவினருக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க: திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்த ஊழியர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. நடந்தது என்ன?
அதே சமயம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையை பெற்று ஆட்சியை அமைக்கும்” என கூறி வருகிறார். மறுபுறம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால், கருத்து முரண்பாடுகள் வெளிப்படுகின்றன.
இதற்கிடையில், சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டிருந்தார். அதேபோல், சசிகலா தரப்பில் அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதில், “பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்கும் நேரம் வந்துவிட்டது; இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சசிகலாவைச் சந்திப்பதற்காக ஓ. பன்னீர்செல்வம் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ”தளபதி டிவி”.. புதிய தொலைக்காட்சியை தொடங்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.. பிளான் என்ன?
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அமமுக:
இந்நிலையில், அதிமுகவில் உட்கட்சி விவகாரம் வெளிப்படத் தொடங்கியுள்ள சமயத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணைய முனைப்பு காட்டி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவர்களை இணைக்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.