Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தூத்துக்குடியில் சோகம்… சாலை விபத்தில் 3 பயிற்சி மருத்துவர்கள் பலி – 2 பேர் படுகாயம்

Road Accident : தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் 3 பேர் நவம்பர் 19, 2025 அன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடியில் சோகம்… சாலை விபத்தில் 3 பயிற்சி மருத்துவர்கள் பலி – 2 பேர் படுகாயம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 19 Nov 2025 18:04 PM IST

தூத்துக்குடி, நவம்பர் 19:  தூத்துக்குடி (Tuticorin) அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றி வந்த 5 மாணவர்கள் பயணித்த கார் நவம்பர் 19, 2025 புதன்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் (Accident) 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தகலவறிந்து உடனடியாக  சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

3 பயிற்சி மருத்துவர்கள் விபத்தில் பலி

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சரண் (24), குரும்பேரி மந்தைவெளியை சேர்ந்த முகிலன் (23), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராகுல் ஜெபஸ்டியன் (23), கோயம்புத்தூரைச் சேர்ந்த சாருபன் (23), தெர்மல் நகர் பகுதியை சேர்ந்த கிருத்திகுமார் (23) ஆகிய ஐந்து பயிற்சி மருத்துவர்கள் நவம்பர் 19, 2025 அன்று ஒரே காரில் பயணம் செய்தனர்.

இதையும் படிக்க : 12ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக்கொலை.. காதலை ஏற்க மறுத்ததால் நேர்ந்த கொடூரம்!!

இந்த நிலையில்  அதிகாலை 3 மணியளவில் கனமழை பெய்துகொண்டிருந்த நிலையில், தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை சாலையில் உள்ள ரோச் பார்க் அருகே வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்தாக கூறப்படுகிறது.  அதிவேகமாக வந்த கார் சாலையோர மரத்தில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  ராகுல் ஜெபஸ்டியன் மற்றும் சாருபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த முகிலன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். கிருத்திகுமார் மற்றும் சரண் தீவிர காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து போலீஸ் தீவிர விசாரணை

விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் தூத்துக்குடி நகர காவல்துறை ஏஎஸ்பி மதன், தென்பாகம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைவாக சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காரில் சிக்கியிருந்தவர்களை மீட்க சில நிமிடங்கள் போராட வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.  இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை 3 மணிக்கு கனமழையில் ஐந்து மருத்துவர்கள் எங்கு சென்றனர், விபத்துக்கான காரணம் என்ன என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க : தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலமாக கிடந்த இளைஞர் – போலீசார் தீவிர விசாரணை – நடந்தது என்ன?

ஒரே கல்லூரியில் பயின்ற ஐந்து இளைஞர்களில் மூவர் ஒரே நாளில் பலியான நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து. மாணவர்கள் மருத்துவமனையில் கதறியழுத சம்பவம் காண்போரை நெகிழ செய்தது.