12ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக்கொலை.. காதலை ஏற்க மறுத்ததால் நேர்ந்த கொடூரம்!!
12th std student stabbed to death: காதல் விவகாரத்தில் பள்ளி மாணவியை பின்தொடர்ந்துச் சென்று இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், நீண்ட நாட்களாக இளைஞர் மாணவியை பின்தொடர்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
ராமநாதபுரம், நவம்பர் 19: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்ற 12ஆம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரத்தில் காலை பள்ளி சென்ற மாணவியை முனிராஜ் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, கொலை செய்த முனிராஜை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் ஏற்கெனவே, மாணவிக்கு இதுபோல் தொடர் கொலை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அம்மாணவி பெற்றோருக்கும் தகவல் தெரவித்துள்ளார். அவர்களும் முனிராஜை அழைத்து எச்சரித்துள்ளனர். எனினும், அதனை பொருட்படுத்தாது முனிராஜ் மீண்டும் மாணவியை பின்தொடர்ந்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து, மாணவி கொலை செய்யப்பட்டது அறிந்த மருத்துமனைக்கு வந்த பெற்றோர் கதறி அழுதது காண்போரை மனமுடைய செய்துள்ளது. காலையிலேயே தமிழகத்தையே உலுக்கும் சம்பவமாக இந்த விவகாரம் மாறியுள்ளது.
மேலும் படிக்க: முட்டை விலை இதுவரை காணாத புதிய உச்சம் – 50 ஆண்டுகால வரலாற்றில் இதுவே அதிகம் – காரணம் என்ன?
பள்ளி மாணவி கத்தியால் குத்திக்கொலை:
ராமேஸ்வரம் அடுத்த சேரங்காட்டை பகுதியை சேர்ந்த மாணவி ஷாலினி. இவர் அப்பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் மாணவி இன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது, முனிராஜ் என்ற இளைஞர் அம்மாணவியை பின்தொடர்ந்து, சென்றுள்ளார். அப்போது, திடீரென சாலையில் வைத்து கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாணவி ஷாலினி ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து, அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், மாணவி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிகிறது.




போலீசார் தீவிர விசாரணை:
தொடர்ந்து, மாணவியை கொலை செய்த இளைஞர் முனிராஜை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து, முனிராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே முனிராஜ் மீது என்னென்ன வழக்குகள் பதிவாக உள்ளன என்பது தெரியவரும்.
துரத்தி துரத்தி காதல்:
இதனிடையே, மாணவியை முனிராஜ் பின்தொடர்ந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து, சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோரிடம் விசாரித்த போது, இளைஞர் முனிராஜை ஏற்கெனவே, அவர்கள் கண்டித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது, ஏற்கெனவே, முனிராஜ் மாணவி ஷாலினிக்கு காதலிக்குமாறு பின்தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். எனினும், இதனை பொருட்படுத்தாமல் மாணவி ஷாலினி இருந்து வந்துள்ளார். அதோடு, தன்னை முனிராஜ் பின்பற்றுவது குறித்து பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளளார்.
Also read: “2026 தேர்தலில் திமுக-தவெக இடையே மட்டும் தான் போட்டி”.. அடித்துச் சொல்கிறார் டிடிவி தினகரன்
முனிராஜை எச்சரித்த பெற்றோர்:
இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் முனிராஜை அழைத்து இனி இதுபோல் தங்கள் மகளை பின்தொடரக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். எனினும், இதனை பொருட்படுத்தாது முனிராஜ், மாணவி ஷாலினியை இன்று பின்தொடர்ந்து சென்று காதலை ஏற்கும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால், மாணவி வழக்கம்போல் அதனை பொருட்படுத்தாது கடந்துச்சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த முனிராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார்.
மருத்துவமனையில் மாணவியின் பெற்றோர்:
தொடர்ந்து, ராமேஸ்வரம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க மருத்துவமனையை சூழ்ந்துள்ளனர். தங்கள் மகளை கொன்ற முனிராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளனர்.