Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொங்கல் பண்டிகை…சென்னையில் போக்குவரத்து மாற்றம்..வெளியூர் வாசிகளே கவனம்!

Chennai Traffic Diversions: பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் போக்குவரத்து மாற்ற வழித்தடத்தை தெரிந்து கொண்டு பயணம் மேற்கொள்ள வேண்டும் .

பொங்கல் பண்டிகை…சென்னையில் போக்குவரத்து மாற்றம்..வெளியூர் வாசிகளே கவனம்!
சென்னையில் போக்குவரத்து மாற்றம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 14 Jan 2026 13:04 PM IST

தமிழகத்தில் நாளை வியாழக்கிழமை (ஜனவரி 12) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் அடுத்தடுத்து விடுமுறை தொடர்ந்து வருகிறது. இதற்காக சென்னையில் இருந்து ஏராளமான வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு படை எடுப்பார்கள். இதனால், சென்னையில் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்காக, சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து நிலையத்துக்கு செல்லும் சாலையில் புதன்கிழமை (ஜனவரி 14), ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) மற்றும் திங்கள்கிழமை (ஜனவரி 19) ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றமானது பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சாலை-பம்மல் சாலையில்…

இந்த 3 நாட்களில் பம்மல்- குன்றத்தூர் சாலை, ஜி எஸ் டி சாலை, திருநீர் மலை சாலை, தாம்பரம்- வேளச்சேரி சாலை, 200 அடி ரேடியல் சாலை, முடிச்சூர் சாலை, காந்தி சாலை ஆகிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது. இதேபோல, வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு மாற்று பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நளம்பாக்கம் க்ரஷர் சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் கீரைப்பாக்கம் வழியாக புதுச்சேரிக்கு செல்லலாம்.

மேலும் படிக்க: பொங்கல் பொருள்கள் விற்பனை அமோகம்…கரும்பு ரூ.700-மல்லி கிலோ ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை!

குன்றத்தூர் வெளிவட்ட சாலை

இதே போல, இந்த வழியில் வரும் வாகனங்கள் வெங்கம்பாக்கம் வழியாகவும் மாபேட்டுக்கு திருப்பி விடப்படும். மேலும், வெளியூர்களில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் கனர வாகனங்களுக்கு மாற்று பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், குன்றத்தூர் வெளிவட்ட சாலை வழியாக வரும் கன ரக வாகனங்கள் மாதா இன்ஜினியரிங் கல்லூரி சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்படப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் வழியாக அனுப்பப்படும்.

தாம்பரத்துக்கு வரும் வாகனங்கள்

காஞ்சிபுரம் மற்றும் ஒரகடத்தில் இருந்து தாம்பரத்திற்கு வரும் வாகனங்கள் முடிச்சூர் வெளிவட்ட சாலை சந்திப்பில் திரும்பி வெளிவட்ட சாலை வழியாக வெளியே செல்ல வேண்டும். இதே போல, மதுரவாயலில் இருந்து வரும் கனரக வாகனங்கள் அந்தப் பகுதியில் உள்ள பிரதான மேம்பாலத்தின் வழியாக திரும்பி பூவிருந்தவல்லி வழியாக செல்ல வேண்டும். வெளியிட்ட சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் வாகனங்கள் மண்ணிவாக்கம் சந்திப்பில் திரும்பி ஒரகடம் வழியாக வெளியேற வேண்டும்.

கிழக்கு கடற்கரை சாலையில்…

இதே போல, கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் கனரக வாகனங்கள், கோவளம் சாலையில் உள்ள சந்திப்பில் திருப்போரூர் வழியாக திரும்பி செல்ல வேண்டும். பழைய மகாபலிபுரம் சாலையில் வரும் வாகனங்கள் பாடூர் சந்திப்பு, செங்கமல் சந்திப்பு வழியாக மாமல்லபுரம் நோக்கி செல்ல வேண்டும். செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்கள், சிங்கப்பெருமாள் கோவில் வழியாக ஸ்ரீபெரும்புதூர் அல்லது வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக வாலாஜாபாத் சாலைக்கு திருப்பிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே! மக்கள் மத்தியில் மறைந்து-மறந்து போன பொங்கல் வாழ்த்து அட்டைகள்!