Tirunelveli Constituency Election 2026: தேசிய ஜனநாயக கூட்டணியின் கோட்டை.. இந்த முறையும் வெற்றியை தக்க வைத்துக்கொள்வார்களா? நெல்லை தொகுதியின் நிலவரம் என்ன?
Tamil Nadu Elections 2026: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக சார்பில் மீண்டும் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் நாம் தமிழர் கட்சி தரப்பில் சத்யா என்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நெல்லை சட்டமன்றத் தொகுதியில் சுமார் 2,92,008 வாக்காளர்கள் உள்ளனர்.

கோப்பு புகைப்படம்
மார்ச் 18, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய சூழலில், தமிழகத்தில் முக்கியமான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது நெல்லை சட்டமன்ற தொகுதி ஆகும். இந்த தொகுதி நெல்லை நகரத்தை மையமாகக் கொண்ட ஒரு முக்கியமான தொகுதியாகும். இந்த தொகுதியில் திருநெல்வேலி டவுன், பாலயங்கோட்டை, மேலப்பாளையம் மற்றும் சில சுற்றியுள்ள பகுதிகளும் அடங்குகின்றன. இந்த தொகுதி நெல்லை சட்டமன்ற தொகுதி உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். மேலும், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி ஒரு பொதுத் தொகுதியாக உள்ளது.
நெல்லை சட்டமன்ற தொகுதி:
நெல்லை தொகுதி தென் தமிழகத்தின் அரசியல் ரீதியாக முக்கியமான தொகுதியாகவும் கருதப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் சுமார் 92,282 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மேலும் படிக்க: நமது தலைமையில் தான் ஆட்சி.. அவதூறுகளை நம்ப வேண்டாம் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்..
இரண்டாவது இடத்தில் திமுக வேட்பாளர் A.L.S. லட்சுமணன் 69,175 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் நான்காவது இடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதியின் அரசியல் வரலாற்றைப் பார்த்தால், அதிமுக கட்சிக்கு இங்கு வலுவான ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. 1977ஆம் ஆண்டு முதல் பார்த்தால், அதிமுக இந்த தொகுதியில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் திமுக நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல்:
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக சார்பில் மீண்டும் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் நாம் தமிழர் கட்சி தரப்பில் சத்யா என்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நெல்லை சட்டமன்றத் தொகுதியில் சுமார் 2,92,008 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் படிக்க: வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் – முதல்வர் ஸ்டாலின்..
மக்களின் முக்கிய பிரச்சனை என்ன?
நெல்லை தொகுதியின் அருகே தாமிரபரணி நதி ஓடிக் கொண்டிருந்தாலும், சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாக இல்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக கோடைக்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
களம் யாருக்கு சாதகமாக இருக்கும்?
அதனைத் தொடர்ந்து சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் குறைவு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, நகராட்சி அடிப்படை வசதிகளின் குறைபாடு, வெள்ளப்பெருக்கு மற்றும் வடிகால் பிரச்சினைகள் போன்றவை மக்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. குறிப்பாக ஒவ்வொரு பருவமழை காலத்திலும் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.
அதே நேரத்தில் இந்த முறை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு களம் சாதகமாக இருக்கலாம் என சில அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏற்கனவே அதிமுக வலுவாக இருக்கும் இந்த தொகுதியில், இந்த முறை பாஜக சார்பில் மீண்டும் Nainar Nagenthran களம் இறங்க வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.