திருப்பரங்குன்றம் தீர்ப்பில் இஸ்லாமியர்கள் எதிர் கருத்து தெரிவிக்கவில்லை…நயினார் நாகேந்திரன்!
Thiruparankundram issue திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவுக்கு எதிராக ஒரு இஸ்லாமியர்கள் கூட எதிர் கருத்து தெரிவிக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மேலும், இதில் மதக்கலவரத்தை ஏற்படுத்த முகாந்திரம் இல்லை என்று குறிப்பிட்டார்.
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என்று அம்பேத்கர் பிறந்தநாளான இன்று சபதம் ஏற்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியானது ராமர் ஆட்சி போல அமையும். திருப்பரங்குன்றத்தில் தீப தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஒரு இஸ்லாமியர் கூட கருத்தோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதக்கலவரம் ஏற்பட முகாந்திரமில்லை
இதனால், மதக் கலவரம் ஏற்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை அழித்து விடுவோம் என்று கூறிவிட்டு அதற்கான ஆரம்ப கட்ட வேலையில் ஈடுபட்டு வருகிறார். அவரின் கனவு பலிக்காது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது. 2021- ஆம் ஆண்டு மானிய கோரிக்கையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டத்தை தமிழக அரசு சேர்க்கவில்லை.
மேலும் படிக்க: தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்த முடியாது…அமைச்சர் சேகர்பாபு!




மதுரை மெட்ரோ திட்டத்துக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை
ஆனால், மத்திய அரசு மெட்ரோ திட்டங்களுக்கான டி பி ஆர் அறிக்கைகளை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசிடம் கூறியுள்ளது. அந்த அறிக்கையில் மதுரையில் மெட்ரோ திட்டம் வேண்டாம் என்பதற்காக மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான இடம், பேருந்து மற்றும் ரயில் பயண நேரம் உள்ளிட்ட மூன்று குறிப்புகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் வளர்ச்சித் திட்டங்களை வேண்டாம் என்று எந்த அரசு கூறுகிறது என்று தெரிந்து கொள்ளலாம். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு 100 நாட்கள் இருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணையலாம். ஆனால் திமுக அரசுக்கான நாட்கள் எண்ணப்படுகிறது.
பாஜக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு பல்வேறு பதவி
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பாஜகவில் பட்டியலின சமுதாய மக்களுக்கு பல்வேறு பொறுப்புகளும், பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு எடுத்துக்காட்டாக இந்திய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், முர்மு ஆகியோர் பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுக்கு திமுக எத்தனை தொகுதிகளை ஒதுக்கும் என்பதை தேர்தல் நெருங்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார் .
மேலும் படிக்க: விஜய் – பரவீன் சக்கரவர்த்தி பேச்சுவார்த்தை.. என்ன சொல்கிறார் செல்வப்பெருந்தகை?