தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பிஎஃப் திட்டம் என்பது ஒரு வரப்பிரசாதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் வாங்கும் சம்பளத்தில் ஒரு சிறு தொகை பிஎஃப் கணக்குக்கு செல்கிறது. அதே தொகையை நிறுவனமும் பங்களிப்பு செய்கிறது. இந்தத் தொகைக்கு வட்டி வருமானமும் கிடைக்கிறது. அவசர தேவைகளுக்கு பிஎஃப் சேமிப்பு பெரும் உதவியாக இருக்கிறது. இந்நிலையில், பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் சேவைகள் 2026 ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை இந்த பிஎஃப் பணத்தை எடுக்க ஆன்லைன் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்கவும் வேண்டும்.