ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் பிக் டிக்கெட் அபு தாபி லாட்டரியில், இந்தியர் ஒருவருக்கு ஜாக்பாட் கிடைத்திருக்கிறது. சவுதி அரேபியாவில் வேலை செய்துவரும் இந்தியர் ராஜன் , கோடிக்கணக்கான ரூபாயை வென்று, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜாக்பாட்களில் ஒன்றை கைப்பற்றியுள்ளார். கடந்த டிசம்பர் 3ஆம் தேதி நடந்த பிக் டிக்கெட், நேரடி நிகழ்ச்சியில் அவரது வெற்றி அறிவிக்கப்பட்டது. நவம்பர் 9ஆம் தேதி வாங்கிய டிக்கெட்டே, ராஜனின் வாழ்க்கையை முழுவதும் மாற்றி அமைத்தது. கடந்த 15 ஆண்டுகளாக பிக் டிக்கெட் வாங்கி வந்த ராஜன், இறுதியாக தனது கனவை நனவாக்கியுள்ளார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா? இந்த லாட்டரி மூலம் பெற்ற பணத்தை, தன்னுடன் பணிபுரியும் 15 அலுவலக ஊழியர்களுடன், அவர் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்.