தென் இந்தியாவின் பிரபல நட்சத்திரம் சமந்தா ரூத் பிரபுவின், திருமணம் தொடர்பான தகவல்கள், ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமொருவை, கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில், இந்து முறைப்படி மணந்தார். இது முழுக்க முழுக்க, குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும், மட்டுமே கலந்து கொண்ட எளிமையான, திருமணமாக இருந்தது. திருமணத்துக்கான மெஹந்தியை, சென்னையைச் சேர்ந்த அருள்மொழி இளவரசு என்பவர் செய்திருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், சமந்தா, மிகவும் எளிமையான, டிசைன்கள் குறைவான மெஹந்தி தான் வேண்டும் என கேட்டார்.