Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“தேர்தல் நேரத்தில் தான் மக்கள் மீது கரிசனமா?” சிலிண்டர் விலை உயர்வை கண்டித்த விஜய்!

TVK Vijay : சிலிண்டர் விலை உயர்வுக்கு மத்திய அரசை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 

“தேர்தல் நேரத்தில் தான் மக்கள் மீது கரிசனமா?” சிலிண்டர் விலை உயர்வை கண்டித்த விஜய்!
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்Image Source: PTI/X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 Apr 2025 13:16 PM

சென்னை, ஏப்ரல் 08: சிலிண்டர் விலை உயர்வுக்கு (Gas Cylinder Price Hike) மத்திய அரசை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (tamilaga vettri kazhagam vijay) கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.  2025 ஏப்ரல் 07ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலையும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியையும் மத்திய அரசு உயர்த்தியது.

சிலிண்டர் விலை உயர்வு

அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 ஆக மத்திய அரசு உயர்த்தியது. இந்த விலை ஏப்ரல் 8ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விலை உயர்வை தொடர்ந்து இனி சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.868.50 ஆகவும் இருக்கும். மேலும், உஜ்வாலா பயனாளிகளுக்கு ரூ.550 ஆகவும் இருக்கும். இதுதவிர, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு ரூ.2 உயர்த்தி உள்ளது.

சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய  அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்

இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் உயர்வுக்கு  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து விஜய்  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.

மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது வரும்? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா? இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்து விடலாம் என்ற நினைப்பில் இருக்கும் திமுக அரசு, இந்த நேரத்திலாவது மனசாட்சிப்படி, தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.

மீண்டும் மீண்டும் பொய் சொல்லி, ஏமாற்றும் வழக்கத்துடன் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆதாரில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? - முழு விவரம் இதோ!
ஆதாரில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? - முழு விவரம் இதோ!...
சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது - விக்ரம் மிஸ்ரி
சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது - விக்ரம் மிஸ்ரி...
நான் கனவுல கூட நினைக்கல .. சூர்யா பற்றி மணிகண்டன் நெகிழ்ச்சி!
நான் கனவுல கூட நினைக்கல .. சூர்யா பற்றி மணிகண்டன் நெகிழ்ச்சி!...
சிலையென நினைத்து நிஜ முதலையிடம் சிக்கிய இளைஞன்!
சிலையென நினைத்து நிஜ முதலையிடம் சிக்கிய இளைஞன்!...
சம்பளத்தை வச்சிகோங்க.. தேசியப் பாதுகாப்பு நிதி வழங்கிய இளையராஜா!
சம்பளத்தை வச்சிகோங்க.. தேசியப் பாதுகாப்பு நிதி வழங்கிய இளையராஜா!...
'இந்தியன் 2' படம்.. மாறிய பிளான்.. எஸ்.ஜே சூர்யா வருத்தம்!
'இந்தியன் 2' படம்.. மாறிய பிளான்.. எஸ்.ஜே சூர்யா வருத்தம்!...
ஸ்ரீநகரில் வெடிசத்தங்கள்! ஜம்மு காஷ்மீர் முதல்வர் கண்டனம்..!
ஸ்ரீநகரில் வெடிசத்தங்கள்! ஜம்மு காஷ்மீர் முதல்வர் கண்டனம்..!...
இந்தியாவிற்கு ஆதரவு.. ஆமிர் கான், சைஃபை கொண்டாடும் இந்தியர்கள்..!
இந்தியாவிற்கு ஆதரவு.. ஆமிர் கான், சைஃபை கொண்டாடும் இந்தியர்கள்..!...
போர் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான்!
போர் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான்!...
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வரவேற்கும் தலைவர்கள்!
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வரவேற்கும் தலைவர்கள்!...
கோடையில் தயிர் ஏன் விரைவாக கெட்டுப்போகிறது? தடுப்பது எப்படி..?
கோடையில் தயிர் ஏன் விரைவாக கெட்டுப்போகிறது? தடுப்பது எப்படி..?...