Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாமக்கல், கரூரில் இன்று பரப்புரை.. குவியும் தொண்டர்கள்.. என்ன பேசப்போகிறார் விஜய்?

TVK Chief Vijay Campaign : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 27) கரூர், நாமக்கல் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் திருச்சி செல்லும் விஜய், அங்கிருந்து வாகனத்தில் நாமக்கல் செல்கிறார். பின்னர், நண்பகலில் கரூரில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

நாமக்கல், கரூரில் இன்று பரப்புரை.. குவியும் தொண்டர்கள்.. என்ன பேசப்போகிறார் விஜய்?
தவெக தலைவர் விஜய்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 27 Sep 2025 07:16 AM IST

சென்னை, செப்டம்பர் 27 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2025 செப்டம்பர் 27ஆம் தேதியான இன்று கரூர், நாமக்கல் மாவட்டங்களில் பரப்பரை மேற்கொள்ள உள்ளார். முதற்கட்டமாக காலையில் நாமக்கல்லில் பரப்புரை மேற்கொண்ட பிறகு, கரூரில் அவர் பரப்புரை மேற்கொள்கிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என நான்கு முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் பரப்புரையை தீவரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்ற பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அவர் பரப்புரை மேற்கொண்டு வருகிறது.

கரூர், நாமக்கல்லில் விஜய் பரப்புரை

தனது முதற்கட்ட பரப்புரையை 2025 செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கினார். திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டார். இதனை அடுத்து, 2025 செப்டம்பர் 20ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மக்களை சந்தித்தார். முன்பெல்லாம் விஜய் விமர்சனங்களுக்கு அமைதியாக இருந்து வந்த நிலையில், இப்போது, தனது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். அதே நேரத்தில், திமுக அரசு மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அனைத்து பரப்புரைகளிலும் விஜய் விமர்சிக்கிறார். இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 27) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர், நாமக்கல் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

வழக்கம்போல இந்த பரப்புரைக்கும் போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். இன்று முதலில் நாமக்கல்லுக்கு வருகை தருகிறார் விஜய். சென்னையில் இருந்து தனி விமானம் திருச்சிக்கு வருகை தரும் விஜய், அங்கிருந்து வாகனத்தில் நாமக்கலுக்கு செல்கிறார். காலை 9 மணியளவில் அவர் நாமக்கல் கேஎஸ் திரையரங்கம் அருகே பரப்புரை மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து, அங்கிருந்து கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நண்பகல் 1 மணியளவில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இதனால், கரூர், நாமக்கல்லில் தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர். மேலும், திருச்சி விமான நிலையத்திலும் அவரை வரவேற்க தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

Also Read : ’சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல’ விஜயை சீண்டும் உதயநிதி ஸ்டாலின்!

என்ன பேசப்போகிறார் விஜய்?

இன்றைய தினம் விஜய் தனது பரப்புரை பேச்சில் திமுக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிடுவதோடு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள் பிரச்னைகளை சுட்டிக் காட்டி வருகிறார். அந்த வகையில், கரூர் மற்றும் நாமக்கல் பரப்புரையிலும் பிரச்னைகளை சுட்டிக் காட்ட உள்ளார். அதே நேரத்தில், கரூர் பரப்புரையின்போது செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தின் முக்கிய முகமாக இருக்கும் செந்தில் பாலாஜியை சீண்டுவதன் மூலம் திமுக தலைமையை கடுமையாக விமர்சிக்க உள்ளாராம்.

Also Read : நாமக்கல், கரூரில் விஜய் பரப்புரை.. தவெக தொண்டர்கள் முக்கிய அறிவுறுத்தல்

மேலும், துணை முதல்வர் உதயநிதிக்கும் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசியி உதயநிதி, நான் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல என்றும் பல மாவட்டங்களுக்கு செல்கிறேன். வாரத்தில் 4,5 நாட்களில் வெளியூரில் தான் இருக்கிறேன் என கூறியிருந்தார். எனவே, துணை முதல்வரின் பேச்சுக்கு அவர் இன்றயை பரப்பரையில் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.