சென்னையில் வெளுக்கப்போகும் கனமழை.. மற்ற மாவட்டங்களில் எப்படி? வானிலை மையம் குளுகுளு அப்டேட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து பல்வேறு மாவட்டங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. எனவே, 2025 ஜூலை 16,17ஆம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வெளுக்கப்போகும் கனமழை.. மற்ற மாவட்டங்களில் எப்படி?  வானிலை மையம் குளுகுளு அப்டேட்!

தமிழகத்தில் மழை

Published: 

15 Jul 2025 06:20 AM

சென்னை, ஜூலை 15 : தமிழக்ததில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் 2025 ஜூலை 15ஆம் தேதியான இன்று கனமழை (Tamil Nadu Weather Update) வெளுக்கப்போவதாக வானிலை மையம் (Tamil Nadu Weather Forecast) தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் மிதமான மழை (Chennai Rains) பெய்ய உள்ளதாகவும், 2025 ஜூலை 16,17ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 ஜூன் மாதத்தில் இருந்தே தமிழகத்தில் பெரியளவில் மழை பொழிவு என்பதே இல்லை. பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. இதற்கிடையில், கடந்த இரண்டு அல்லது மூனறு தினங்களாகவே வானிலை மாறியது. அதாவது, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகரிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 2025 ஜூலை 14ஆம் தேதியான நேற்று கூட, இரவில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

இதனால், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், தமிழக்ததில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக்ததில் 2025 ஜூலை 19ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய்க் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 2025 ஜூலை 15ஆம் தேதியான நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.

Also Read : கொரோனா-இன்ஃப்ளூயன்ஸா ஒரே பரிசோதனை: அரசு மருத்துவமனைகளில் புதிய நடைமுறை

சென்னைக்கு கனமழை அலர்ட்

தொடர்ந்து, 2025 ஜூலை 16,17ஆம் தேதிகளில் தமிழக்ததில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 2025 ஜூலை 18,19ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தமிழக்ததில் அதிகபட்ச வெப்பநிலை மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்றும் இருப்பினும், அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெதர்மேன் சொன்ன விஷயம்


இதற்கிடையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வானிலை குறித்து தனது எக்ஸ் தளத்தில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, ” சென்ன உட்பட வட தமிழக மாவட்டங்களில் குளுகுளு நாட்கள் திரும்ப வர போகிறது. 2025 ஜூலை 17ஆம் தேதி சென்னை உட்பட வட மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும். அதே நேரத்தில், கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யக் கூடும்.

Also Read : 17 மணிநேரத்திற்கு பிறகு! ஒரு வழி தடத்தில் தொடங்கிய ரயில் சேவை.. பயணிகள் மகிழ்ச்சி!

இன்னும் இரண்டு வெப்பம் இருக்கும். 2025 ஜூலை 16ஆம் தேதி பலத்த மழை பெய்யத் தொடங்கும். குறிப்பாக சென்னை மற்றும் வட மாவட்டங்களில் கனமழை கொட்டும். இரவில் லேசான மழை இருக்கும. 2025 ஜூலை 19 முதல் 27ஆம் தேதி வரை கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், காவரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும். எனவே, இந்த பகுதிகளுக்கு டூர் செல்ல திட்டமிட்டிருந்தால், அதற்கு ஏற்றபடி திட்டமிட்டுங்கள்” என பதிவிட்டிருந்தார்.