தமிழகத்தில் வெளுக்கும் மழை.. வெப்பநிலை எப்படி இருக்கும்? வானிலை மையம் அப்டேட்!
tamil nadu weather Update : தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், தமிழக்ததில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை, மே 10: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் சென்னையிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. 2025 மார்ச் மாதம் முதலே கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. தற்போது வரை பல்வேறு இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது. மேலும், பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மக்கள் வெளியே செல்ல சிரமப்படுகின்றனர். இதற்கிடையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழகத்தில் வெளுக்கும் மழை
இதனால், மே மாதத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லை. இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
அதோடு, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 மே 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, 2025 மே 10ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும எனவும் லேசான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், அதிகபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை எப்படி இருக்கும்?
Maximum Temperature recorded on 09.05.2025 pic.twitter.com/SysADk6aOs
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) May 9, 2025
மேலும், தமிழகத்தில் அடுத்த் 2 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையத்தில் 40.6 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.
மேலும், கரூர் பரமத்தியில் 40 டிகிரி செல்சியஸ், ஈரோடு 40.2 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 38.5 டிகிரி செல்சியஸ்இ பாளையங்ககோட்டை38.5 டிகிரி செல்சியஸ், மதுரை நகரத்தில் 38.8 டிகிரி செல்சியஸ், சென்னை மீனம்பாக்கத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே 13ஆம் தேதி அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால், வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.