Tamil Nadu News Highlights: அன்புமணி ராமதாஸின் 100 நாட்கள் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

Tamil Nadu Breaking news Today 22 July 2025, Highlights: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் மக்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை இந்த பயணம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu News Highlights: அன்புமணி ராமதாஸின் 100 நாட்கள் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

தமிழ்நாடு செய்திகள்

Updated On: 

22 Jul 2025 19:00 PM

தென்னிந்திய கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக ஜூலை 22-இல் நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு (Rain) வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்திருக்கிறது. மழை குறித்த தகவல்களை இந்த பகுதியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (Mk Stalin) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 3 நாட்கள் ஓய்வு தேவை எனவும் அவர் மருத்துவமனையில் இருந்தே தனது பணிகளை மேற்கொள்வார் எனவும் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது. இதுதொடர்பான தகவல்களை இந்த பகுதியில் பார்க்கலாம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூலை 22, 23, 2025 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்து அப்டேட்டுகளை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

குரூப் 2 தேர்வர்களுக்கு ஜூலை 22 முதல் 24-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி (TNPSC) அறிவித்துள்ளது. சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வழக்கில் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதித்தது குறித்து ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டிருந்தார். இந்த கேள்விகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஜூலை 22-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணை குறித்த தகவல்களை இந்தப் பகுதியில் காணலாம்.

மேலும் பல தமிழ்நாடு செய்திகளை தெரிந்துகொள்ள கிளிக் செய்க

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 22 Jul 2025 06:51 PM (IST)

    PM Modi: பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை – பயண அட்டவணை வெளியீடு

    இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி ஜூலை 26ம் தேதி இரவு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்று திருச்சி செல்கிறார். ஜூலை 27ம் தேதி காலையில் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் வழிபாடு செய்து விட்டு பிற்பகலில் திருச்சியில் இருந்து டெல்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 22 Jul 2025 06:30 PM (IST)

    Aadi Amavasai: ஆடி அமாவாசை.. ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    ஜூலை 24ம் தேதி கடைபிடிக்கப்படும் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. ஜூலை 23ம் தேதி சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 22 Jul 2025 06:20 PM (IST)

    Train Service: மின்சார கம்பத்தில் சேதம்… ரயில் சேவை பாதிப்பு

    சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள உயர் அழுத்த மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டதால் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் – தாம்பரம் வழித்தடத்தில் ஒரு மணி நேரமாக ரயில் சேவை இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • 22 Jul 2025 06:00 PM (IST)

    ஓரணியில் தமிழ்நாடு திட்டம்.. புதிய வழிமுறைகள் வெளியீடு

    ஓரணியில் தமிழ்நாடு எனப்படும் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு புதிய வழிமுறை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி `மக்களுடன் ஸ்டாலின்’ App-ஐ அனைவரும் Update செய்து கொள்ளலாம் எனவும், ஒரு குடும்பத்திற்கு ஒரு செல்போன் நம்பரில் 4 நபர்கள் வரை சேரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 22 Jul 2025 05:46 PM (IST)

    தனிநபர் வருமானம்.. இரண்டாவது இடம் பிடித்த தமிழ்நாடு

    தனிநபர் வருமானத்தில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதனை மக்களவையில் மத்திய இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1,96,309 ஆக உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 22 Jul 2025 05:20 PM (IST)

    ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகள் தற்காலிகமாக மூடல்

    விருதுநகரில் அதிகாரிகளின் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆலை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என விமர்சனம் எழுந்துள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • 22 Jul 2025 05:00 PM (IST)

    Anbumani Ramadoss: 100 நாட்கள் மக்களை சந்திக்க செல்லும் அன்புமணி!

    2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் ஜூலை 25 முதல் நவம்பர் 1 வரை 100 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 22 Jul 2025 04:39 PM (IST)

    பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றக்கூடாது!

    மறு உத்தரவு வரும் வரை பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் தற்போது உள்ள நடைமுறை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 22 Jul 2025 04:20 PM (IST)

    Local Holiday: விருதுநகர் மாவட்டத்திற்கு ஜூலை 28ல் உள்ளூர் விடுமுறை

    ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவின் ஒரு பகுதியாக ஜூலை 28ல் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாற்று வேலை நாளாக ஆகஸ்ட் 9 சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 22 Jul 2025 04:00 PM (IST)

    ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்க வாய்ப்பு இல்லை – எடப்பாடி பழனிசாமி

    ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அவர் விவகாரத்தில் காலம் கடந்துவிட்டது.எந்த வகையிலும் ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்க வாய்ப்பு இல்லை. அவர் அதிமுகவை எதிர்த்துதான் குரல் கொடுத்து கொண்டிருக்கிறார்

  • 22 Jul 2025 03:45 PM (IST)

    TN Rain Live News: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்காசி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 22 Jul 2025 03:25 PM (IST)

    சிவகாசியில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து

    விருதுநகர் மாவட்டத்தில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து அங்கு செயல்படும் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இப்படியான நிலையில் பட்டாசு பயிலக பயிற்சியில் கலந்து கொள்ளாத 20 ஆலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • 22 Jul 2025 03:10 PM (IST)

    திருப்புவனம் அஜித்குமார் மரணம்.. இடைக்கால இழப்பீடு வழங்க உத்தரவு

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  • 22 Jul 2025 02:55 PM (IST)

    வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

    கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருகை தந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

  • 22 Jul 2025 02:35 PM (IST)

    தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து மாநில பாஜக பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி ஜூலை 27ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 22 Jul 2025 02:15 PM (IST)

    TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்க – எடப்பாடி பழனிசாமி

    குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். வினாத்தாள் மற்றும் விடைத்தாள் ஆகிய இரண்டும் சரியாக சீலிடப்படாமல் எடுத்து செல்லப்பட்டதாக வெளியான செய்தி அடிப்படையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

  • 22 Jul 2025 01:57 PM (IST)

    மருத்துவமனையில் இருந்தப்படியே பணிகளை தொடர்கிறேன் – முதல்வர் ஸ்டாலின்..

    மருத்துவமனையில் இருந்தப்படியே பணிகளை தொடர்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளா. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 நாட்கள் ஓய்வு வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனையில் இருந்தப்படியே அரசு பணிகள்:

  • 22 Jul 2025 01:40 PM (IST)

    டெங்கு பரவலை தடுக்கும் முயற்சியில் சென்னை மாநகராட்சி..

    2025 ஜூன் மாதம் வரையில், வீடுகளில் மற்றும் பொது இடங்களில் தேங்கியிருந்த 23 டன் வாகன டயர்களை உட்பட தேவையற்ற கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில், நகரத்தின் பல பகுதிகளில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், டெங்கு பரவலை கட்டுப்படுத்த அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 22 Jul 2025 01:20 PM (IST)

    Dengue Fever: சென்னையில் டெங்கு பரவல் அதிகரிப்பு..

    சென்னையில் மழையால் சாலைகளிலும் பள்ளங்களிலும் நீர் தேங்கி டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. சோழிங்கநல்லூர், அடையாறு பகுதிகளில் 170 பேருக்கு மேல் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 22 Jul 2025 01:05 PM (IST)

    PT period-ல், தயவுசெய்து ஆசிரியர்கள் பாடங்கள் எடுக்க வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

    “PT period-ல், தயவுசெய்து ஆசிரியர்கள் பாடங்கள் எடுக்க வேண்டாம். இது மாணவர்கள் விளையாடும் நேரம், அவர்களது உரிமை,” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும்,  கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் இதைத் தெரிவித்த அவர், ஆசிரியர்கள் கடன் வாங்கி வகுப்பு எடுக்கும் நிலை உருவாகக்கூடாது எனக் கேட்டுக்கொண்டார். மேலும் படிக்க..

  • 22 Jul 2025 12:45 PM (IST)

    தமிழ்நாடு முதல்வர் கோப்பை – ரூ. 36 கோடி நிதி ஒதுக்கீடு..

    விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாடு முதல்வர் கோப்பை போட்டிகளுக்காக ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து விளையாட்டு வீரர்களும் “சாம்பியன் அறக்கட்டளையை” பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

  • 22 Jul 2025 12:30 PM (IST)

    மாணவர்கள் தினமும் விளையாட்டில் பயிற்சி பெற வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..

    சென்னையில் நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். விடாமுயற்சி முக்கியம் என வலியுறுத்திய அவர், மாணவர்கள் தினமும் விளையாட்டில் பயிற்சி பெற வேண்டும் என்றார். தமிழ்நாடு முதல்வர் கோப்பை போட்டிகளுக்காக ரூ.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  • 22 Jul 2025 12:15 PM (IST)

    கணவர் ஸ்டாலினுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது – மகிழ்ச்சி பொங்க துர்கா ஸ்டாலின் பேச்சு

    ” மனம் முன் வந்து நீ எழுது துர்கா என்று என் கணவர் சொல்லியதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. பேரக்குழந்தைகள் இந்த புத்தகத்தைப் பெற்றுக் கொண்டது ஒரு பாட்டியாக எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி, அன்பு முத்தங்களை பேர குழந்தைகளுக்கு பரிசாக தருகிறேன்” என அவரும் நானும் நூல் வெளியீட்டு விழாவில் துர்கா ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும் படிக்க

  • 22 Jul 2025 12:01 PM (IST)

    ராமேஸ்வர மீனவர்கள் கைது.. கவலையில் குடும்பத்தினர்..

    ராமேஸ்வரம் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. சில நேரங்களில் மீனவர்களுக்கு மரியாதையற்ற முறையில் நடத்துகின்றதாகவும், சிலர் துன்புறுத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், மீனவர்கள் உயிருடன் திரும்புவதில் கூட தற்பொழுது உறுதி இல்லை என குடும்பத்தினர் வேதனையுடன் கூறுகின்றனர். மேலும் படிக்க

  • 22 Jul 2025 11:50 AM (IST)

    ” எனது கணவரின் எண்ணம் முழுவதும் இங்குதான் இருக்கும்” – துர்கா ஸ்டாலின் நெகிழ்ச்சி..

    ’அவரும் நானும்’ நூல் வெளியீட்டு விழாவில், “ தனக்கு கிடைத்த நேரத்தில் நூலை முழுவதுமாக படித்து, ஆலோசனை வழங்கியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, நேரில் வர முடியவில்லை என்றாலும் என்னுடைய கணவருடைய எண்ணம் முழுவதும் இங்குதான் இருக்கும், என்னை வாழ்த்தி இங்கு அனுப்பி இருக்கிறார் எனது கணவர்” என நூல் ஆசிரியர் துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • 22 Jul 2025 11:45 AM (IST)

    Fisherman Arrested in Sri Lanka: தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

    ராமேஸ்வரத்தைச்  சேர்ந்த நான்கு தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை மன்னார் கடற்படை முகாமில் நடைபெற்று வருகிறது.

  • 22 Jul 2025 11:30 AM (IST)

    நான் இப்படி ஒரு நூலை எழுதுவதற்கு என் கணவர் தான் காரணம் – துர்கா ஸ்டாலின்..

    சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துர்கா ஸ்டாலின் அவர்கள் எழுதிய ‘அவரும் நானும்’ (இரண்டாம் பாகம்) நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.  நான் இப்படி ஒரு நூலை எழுதுவதற்கு முழு முதல் காரணம் என் கணவர் தான் அதற்காக அவருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என நூல் வெளியீட்டு விழாவில் துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • 22 Jul 2025 11:10 AM (IST)

    இன்று தொடங்கிய கால்நடை படிப்புகளுக்கான கலந்தாய்வு

    தமிழ்நாட்டில்  கால்நடை மருத்துவ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான  கலந்தாய்வு 2025 ஜூலை 22 இன்று தொடங்குகிறது. 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 660 பிவிஎஸ்சி – ஏஎச் இடங்கள் உள்ளன, இதில் 597 இடங்கள் தமிழ்நாட்டுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பம் உள்ளிட்ட பி.டெக் படிப்புகளுக்கும்  கலந்தாய்வு நடைபெறுகிறது.

  • 22 Jul 2025 10:55 AM (IST)

    சிறுமி பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியின் தெளிவான புகைப்படம் வெளியீடு..

    குற்றவாளி இன்னும் பிடிபடாத நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு உதவுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல் குற்றவாளி குறித்து சரியான தகவல் வழங்கினால் ஐந்து லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தையும் காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர். மேலும் படிக்க.. 

  • 22 Jul 2025 10:40 AM (IST)

    திருவள்ளூர்: 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் பணி..

    திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர். இதற்காக காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஐந்து டிஎஸ்பிக்கள் உட்பட பத்து தனி படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

  • 22 Jul 2025 10:20 AM (IST)

    திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை.. குற்றவாளி குறத்த தகவல்.. ரூ. 5 லட்சம் வெகுமதி..

    திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் குற்றவாளியை தேடும் பணி காவல்துறையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் குற்றவாளி குறித்து சரியான தகவல் கொடுக்கும் நபர்களுக்கு 5 லட்சம் வெகுமதி கொடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 22 Jul 2025 10:01 AM (IST)

    Veterinary Courses Counseling : கால்நடை மருத்துவம் கலந்தாய்வு இன்று

    தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவம்  மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 660 இடங்கள் உள்ளன. தமிழக மாணவர்களுக்கு 597 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    Read more

  • 22 Jul 2025 09:57 AM (IST)

    VS Achuthanandan Live : திருவனந்தபுரம் நகரில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்

    வி.எஸ்ஸின் உடல் துக்க ஊர்வலமாக வீட்டிற்கு கொண்டு செல்லப்படுவதால், நண்பகல் முதல் திருவனந்தபுரம் நகரில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவரது உடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று மாநிலத்தில் பொது விடுமுறை. மூன்று நாள் அதிகாரப்பூர்வ துக்க காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது

  • 22 Jul 2025 09:56 AM (IST)

    VS Achuthanandan Live Updates : அச்சுதானந்தனின் உடலுக்கு மக்கள் மரியாதை

    மறைந்த முன்னாள் முதலமைச்சரும், மூத்த சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தனின் உடல் காலை 9 மணி முதல் தர்பார் மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். தற்போது காவடியாரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடல், காலை 9 மணிக்குள் தர்பார் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படும். பின்னர், மதியம் துக்க ஊர்வலமாக உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படும்.

  • 22 Jul 2025 09:53 AM (IST)

    பேச ஆள் இல்லாத திமுக கட்சி – ஆதவ் விமர்சனம்

    திமுக குறித்து பேசிய ஆதவ் அர்ஜூனா, பேசி வளர்ந்த திமுக கட்சியில் பேச ஆளில்லை அதனால்தான் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெரியார் அண்ணாவின் கொள்கைகளை திமுக என்றைக்கோ விட்டுவிட்டது.   தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொள்கை என்ற ஒன்று கிடையாது. வெறும் ஊழல் மட்டும் தான் என்றார்

    Read More

  • 22 Jul 2025 09:44 AM (IST)

    திமுகவின் ஊழல் – மேடையில் பேசிய ஆதவ் அர்ஜூனா

    சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை குழு பொது செயலாளர் ஆதர் அர்ஜுனா உரையாற்றினார். அப்போது பேசிய அவர் திமுகவின் ஊழல் தான் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்து வருகிறது என பேசியுள்ளார்.

  • 22 Jul 2025 09:18 AM (IST)

    புது சட்டம் – வழக்கறிஞர் சொன்னது என்ன?

    இது தொடர்பாக கோர்ட்டில் பேசிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழக அரசு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகள் மற்றும் பெண்களின் நலனுக்காக புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன் கீழ் பள்ளிக்கல்வித் துறையும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும் இணைந்து செயல்படவேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றனர்.

    Read more

  • 22 Jul 2025 08:59 AM (IST)

    மாணவிகளை பாதுகாக்க வரும் புதிய சட்டம்

    விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகள்  மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய, தமிழக அரசு புதிய சட்டம் கொண்டு வர உள்ளது. இந்த தகவலை தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்துள்ளது

  • 22 Jul 2025 08:39 AM (IST)

    2 நாட்கள் ஓய்வில் மு.க.ஸ்டாலின்

    நேற்று, வழக்கமான காலை நடைபயிற்சியின் போது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார்.  மருத்துவமனை சென்ற அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 நாட்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தினர்.

    Read More

  • 22 Jul 2025 08:36 AM (IST)

    MK Stalin Health Update : மு.க.ஸ்டாலின் உடல்நிலை – நிகழ்ச்சிகள் ரத்து

    முதலமைச்சர் முக ஸ்டாலின் 2 நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால் இன்றும் நாளையும், அதாவது 2025 ஜூலை 22 மற்றும் ஜூலை 23 ஆகிய நாட்களில் கொங்கு மண்டலத்தில் அவர் பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 22 Jul 2025 08:22 AM (IST)

    Jagdeep Dhankar Update : ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா ஏன்?

    துணை ஜனாதிபதியாக (Vice President) பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் (jagdeep dhankhar) , தனது உடல்நலக்குறைவு காரணமாக  திடீரென ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. தற்போது 73 வயதான ஜெகதீப் தன்கர் இந்த முடிவை எடுத்துள்ளார். திடீர் ராஜினாமாவுக்கு என்ன காரணம்?

    Read more

  • 22 Jul 2025 08:18 AM (IST)

    41 மெட்ரோ நிலையங்களில் நிறுத்தம்

    மெட்ரோ அறிவிப்பின்படி, 2025, ஆகஸ்ட் முதல், சென்னை மெட்ரோ ரயிலின் 41 நிலையங்களிலும் சி.எம்.ஆர்.எ4ல். பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படவுள்ளது. எனினும், கியூஆர் பயணச்சீட்டு மற்றும் பிற டிக்கெட் முறை வழக்கம்போல் இயங்கும்.

    Read More

  • 22 Jul 2025 08:06 AM (IST)

    Chennai Metro : சென்னை மெட்ரோ ரயில் அறிவிப்பு

    சென்னை மெட்ரோ ரயில் ஆகஸ்ட் 1 முதல் தேசிய அட்டைக்கு மாற்றப்படுகிறது. அதாவது சி.எம்.ஆர்.எல். அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. பழைய அட்டையிலுள்ள மீதித் தொகை மற்றும் வைப்பு தொகை புதிய அட்டைக்கு மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது

  • 22 Jul 2025 07:37 AM (IST)

     கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை

    தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸ். திருச்சியில் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், மதுரையில் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை பொருத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 31.7 டிகிரி செல்சியசும், நுங்கம்பாக்கத்தில் 31.3 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.

    Read More

  • 22 Jul 2025 07:25 AM (IST)

    குறைந்த வெயில்.. சென்னை வானிலையில் மாற்றம்

    ஜூலை மாதம் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது.  சுமார் 40 டிகிரி செல்சியஸ் வரை சென்னையில் வெப்பநிலை பதிவானது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆனால் தற்போது சென்னை வானிலை முற்றிலும் மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.

  • 22 Jul 2025 07:06 AM (IST)

    Chennai Rains : சென்னை வெதர் நிலவரம் இதுதான்!

    ஜூலை 24 2025 முதல் ஜூலை 27 2025 வரை தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை மட்டுமே இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

  • 22 Jul 2025 07:02 AM (IST)

    Weather Today : நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு

    தென்னிந்தியா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக  இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது