நான் இப்படி ஒரு நூலை எழுதுவதற்கு முழு முதல் காரணம் என் கணவர் – நூல் வெளியீட்டு விழாவில் துர்கா ஸ்டாலின் நெகிழ்ச்சி..
Durga Stalin Book Release: இந்த புத்தகத்தில் பெரும்பான்மையான வாசகர்கள் நம் நாட்டின் பெண்கள், என்னை வீட்டில் ஒருவராக நினைத்து என்னை மறுபடியும் எழுத தூண்டியவர்கள் அவர்கள்தான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என நூல் ஆசிரியர் துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை 22, 2025: நான் இப்படி ஒரு நூலை எழுதுவதற்கு முழு முதல் காரணம் என் கணவர் தான் அதற்காக அவருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என நூல் வெளியீட்டு விழாவில் துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துர்கா ஸ்டாலின் அவர்கள் எழுதிய ‘அவரும் நானும்’ (இரண்டாம் பாகம்) நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய நூல் இன்று வெளியிடப்பட்டது. எழுத்தாளர் சிவசங்கரி நூலினை வெளியிட டாபே குழுமத்தின் தலைவர்-நிர்வாக இயக்குநர் மல்லிகா சீனிவாசன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர். மேலும் இன்பன் உதயநிதி, நலன் சபரீசன், தன்மயா உதயநிதி மற்றும் நிலானி சபரீசன் ஆகியோர் சிறப்பு பிரதியினை பெற்றுக்கொண்டனர்.
என் கணவருடைய எண்ணம் இங்கு தான் இருக்கும் – துர்கா ஸ்டாலின்:
இந்நிகழ்வில் நூலின் ஆசிரியர் துர்கா ஸ்டாலின் அவர்கள் ஏற்புரை வழங்கினார். மேலும் நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். நூல் ஆசிரியர் துர்கா ஸ்டாலின் ஏற்புரையாற்றினார். அதில் பேசிய அவர், “ நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன், தனக்கு கிடைத்த நேரத்தில் நூலை முழுவதுமாக படித்து, ஆலோசனை வழங்கியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, நேரில் வர முடியவில்லை என்றாலும் என்னுடைய கணவருடைய எண்ணம் முழுவதும் இங்குதான் இருக்கும், என்னை வாழ்த்தி இங்கு அனுப்பி இருக்கிறார் எனது கணவர் அவர்கள்.
2010ல் தளபதி நானும் என்று நூல் வெளிவந்தது, இந்தத் தொடரை பார்த்து என்னை பாராட்டுவார் எனது அத்தை, அவராலும் வர முடியவில்லை அவருடைய வாழ்த்து என்றும் எனக்கு இருக்கும், ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண்மணிகள் இங்கு வருவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
Also Read: அதிகரிக்கும் இரவு நேரக் குற்றங்கள்.. சென்னை காவல்துறையினருக்கு புதிய உத்தரவுகள்!
இந்தப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அவர் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவரின் மனம் முழுவதும் இங்குதான் இருக்கும். இந்த நிகழ்ச்சியை நேரலையில் பார்த்துகொண்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல அவர்தான் என்னை அனுப்பிவைத்தார்.
கணவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த துர்கா ஸ்டாலின்:
VIDEO | Tamil Nadu CM Stalin’s wife Durga releases her book ‘Avarum Naanum’ in Chennai.
(Full video available on PTI Videos- https://t.co/n147TvrpG7) pic.twitter.com/QXcL6Swh0u
— Press Trust of India (@PTI_News) July 21, 2025
இரண்டாம் பாகத்தை அழகாக வெளியிட்டதற்கு மனுஷ புத்திரன் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்படி ஒரு நூலை எழுதுவதற்கு முழு முதல் காரணம் என் கணவர் தான் அதற்காக அவருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், மனம் முன் வந்து நீ எழுது துர்கா என்று என் கணவர் சொல்லியதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
பேரக்குழந்தைகள் இந்த புத்தகத்தைப் பெற்றுக் கொண்டது ஒரு பாட்டியாக எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி, அன்பு முத்தங்களை பேர குழந்தைகளுக்கு பரிசாக தருகிறேன், எங்களுடைய 50 ஆண்டுகால வாழ்க்கை வரலாற்றை உணவுப்பூர்வமாக என்னுடைய முன்னோட்ட பார்வையில் கூறியிருக்கிறேன்.
Also Read: முதல்வர் ஸ்டாலினுக்கு 3 நாட்கள் ஓய்வு தேவை – மருத்துவமனை அறிக்கை
இந்த புத்தகத்தில் பெரும்பான்மையான வாசகர்கள் நம் நாட்டின் பெண்கள், என்னை வீட்டில் ஒருவராக நினைத்து என்னை மறுபடியும் எழுத தூண்டியவர்கள் அவர்கள்தான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என தெரிவித்தார். இந்நிகழ்வில் குடும்பத்தினர்கள், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், கழக நிர்வாகிகள், தமிழ் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.