தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஆபத்தா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Tamil Nadu Covid Cases : இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோன வீரியம் இல்லாதது என்றும் கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிமணியன் தெரிவித்துள்ளார். மேலும், பொது இடங்களில் முகக் கவசம் அணிவந்து நல்லதே தவிர கட்டாயம் இல்லை

தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஆபத்தா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Tamil Nadu Covid Cases

Updated On: 

31 May 2025 13:28 PM

 IST

சென்னை, மே 31 : இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோன வீரியம் இல்லாதது என்றும் கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. பொது இடங்களில் முகக் கவசம் அணிவந்து நல்லதே தவிர கட்டாயம் இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வெவ்வேறு பெயர்களால் வரக்கூடிய கொரோனா பாதிப்புகளால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை. கொரோனா என்பது உருமாற்றம் பெற்று வருவது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. பரிசோதனை செய்தால் அதிக பேருக்கு கொரோனா இருக்க வாய்ப்பு இருக்கு.

”மக்கள் அச்சப்பட தேவையில்லை”

பூனேவில் இருக்கும் பரிசோதனை மையத்திற்கு 19 மாதிரிகளை அனுப்பி இருக்கிறோம். இது வீரியம் இல்லாத கொரோனா என்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மத்திய அரசு அறுவுறுத்தல் வழங்கி உள்ளது. பெரிய அளவில் பாதிப்புகளுடன் இருப்பவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிவது நல்லது.

கொரோனா குறித்து தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். யாரும் பயப்பட தேவையில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் பொது இடங்களில் முகக் கவசம் அணிந்து கொள்ளலாம். இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் 1000 ஆண் குழந்தைகள் பிறந்தால் 931 என்ற பெண் பிறப்பு விகிதம் இருந்தது. அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் கருவின் தன்மையை கண்டறிதல் கடுமையான விதிமுறைகளை கடைப்பிடித்ததன் காரணமாக 931 என்பது 940 குழந்தைகள் என தற்போது வந்துள்ளது.  ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மகப்பேறு மரணம் விகிதம் குறைந்து வருகிறது” என்றார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள்

தமிழகத்தில் கொரோனா  தொற்றால் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.  இருப்பினும், இந்த கொரோனா பாதிப்புகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத என்றும் கூறியுள்ளது.

மாநில வாரியான விவரங்கள்


இந்தியாவில் 2,710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கேரளா மாநிலத்தில் அதிகபட்சமாக 1,147 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தாக, குஜராத்தில் 223 பேரும், டெல்லியில் 294 பேரும், மகாராஷ்டிராவில 424 பேரும், மேற்கு வங்கத்தில் 116 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்
மனப் பயிற்சிகள் பல வழிகளில் நன்மை பயக்கும்.. வியக்கு வைக்கும் ஆய்வுகள்
7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வாயில் கவ்விச்சென்ற புலி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் பாதை