பூந்தமல்லி டூ சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரூட்… வந்தது கிரீன் சிக்னல்.. தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

Poonamallee Sunguvarchatram Metro : சென்னை பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மெட்ரோ விரிவாக்கத்திற்கு நிலம் எடுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பூந்தமல்லி டூ சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரூட்... வந்தது கிரீன் சிக்னல்.. தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

சென்னை மெட்ரோ

Updated On: 

04 Sep 2025 17:57 PM

 IST

சென்னை, செப்டம்பர் 04 : சென்னை பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம் வழித்தடத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், விரையில் இந்த வழித்தடத்தில் பணிகள் தொடங்கக் கூடும்.  சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக மெட்ரோ ரயில் சேவை மாறிவிட்டது. மெட்ரோ ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பணிகள் பயணித்து வருகின்றனர். தற்போது சென்னையில் இரண்டு வழித்தடத்தில் மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ப்ளூ லைனில் விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரையும், க்ரீன் லைனில் சென்ட்ரலில் இருநது பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது.

மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதியை விரிவுப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதில் பூந்தமல்லி வழித்தடத்தில் பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று பூந்தமல்லி சுங்குவார்சத்திரம் வழித்தடம். இந்த வழித்தடம் பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால், சென்னை அடுத்த பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்து அதற்கு பணிகள் நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து இணைப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது.

Also Read : தொடர் விடுமுறை.. ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கெல்லாம்?

இந்த நிலையில், சென்னை பூந்தமல்லி இருந்து சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. பூந்தமல்லி மற்றும் சுங்குவார்சத்திரம் இடையேயான வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்துதல், ஆய்வுகள் மற்றும் சாலைப் பணிகள் மேற்கொள்ள ரூ.2,126 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த வழித்தடத்தை பரந்தூர் வரை நீடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.2,126 கோடி நிதியில் சுங்குவார்சத்திரம் வரை பணிகளை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை முதல் பரந்தூரை வரை மெட்ரோ சேவை விரைவில் தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது

Also Read : சென்னையில் வீட்டு நாய்களுக்கு சிப் கட்டாயம்.. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

பூந்தமல்லி மற்றும் சுங்குவார்சத்திரம் இடையே நாசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம் பேருந்து நிலையம், சமத்துவபுரம், செட்டிப்பேடு, தண்டலம், சிப்காட் இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெருநூல்புதூர், சத்திரம், பட்டுநூல்புதுார் ஆகிய 14 நிலையங்கள் அமைக்கப்படும்.  இதில், முதல் கட்டமாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் பணிகளும் நடைபெறும். இரண்டாம் கட்டமாக சுங்குவார்சத்திரம் முதல் பரந்தூரை வழித்தடம் வரை நீடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.