Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

போராட்டத்தில் போலீசார் மீது தாக்குதல்.. வடமாநில தொழிலாளர்கள் விவரம் சேகரிப்பு!

Contract workers protest: திருவள்ளூர் அருகே உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளி ஒருவர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையில் முடிந்ததால், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

போராட்டத்தில் போலீசார் மீது தாக்குதல்.. வடமாநில தொழிலாளர்கள் விவரம் சேகரிப்பு!
வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 03 Sep 2025 09:23 AM

திருவள்ளூர், செப்டம்பர் 3: திருவள்ளூர் அருகே வடமாநில தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வின் போது வட மாநில தொழிலாளர்கள் காவல்துறையினர் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்துள்ள காட்டுப் பள்ளியில் எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஒப்பந்த தொழிலாளராக ஏராளமான வட மாநில இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அமரேஷ் பிரசாத் என்பவர் வேலை பார்த்து வந்தார். இப்படியான நிலையில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 1) இரவு அங்குள்ள தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பில் மாடியில் ஏறும் போது அவர் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அமரேஷ் பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அவர் எப்படி இறந்தார் என்பது தொடர்பாக அங்கு தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்ககோயில் கோபுரம் மீது தேசிய கொடியுடன் போராட்டம்.. கீழே இறங்கும் போது உயிரிழந்த சோகம்..

தொழிலாளர்கள் போராட்டம் – காவல்துறையினர் தடியடி

இதற்கிடையில் வட மாநில தொழிலாளியான அமரேஷ் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறியும் அங்கு பணியாற்றி வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சிலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் தற்காப்புக்காக தங்களை பாதுகாப்பு தடுப்புகளை கொண்டு காத்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் போராட்டம் கைமீறி சென்றதை உணர்ந்த போலீசார், வட மாநில தொழிலாளர்கள் மீது கண்ணீர் புகை கொண்டு வீசியும்,  தடியடி நடத்தியும் கூட்டத்தை விரட்டியடித்தனர்.

அதே சமயம் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் குடியிருப்பு பகுதிக்குள் செல்லாமல் கூச்சல் எழுப்பி அட்டகாசம் செய்தனர். இதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.  தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் விசாரணைக்குப் பின்  29 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு? – அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த ரிப்போர்ட்!

தகவல்கள் சேகரிப்பு 

இப்படியான நிலையில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடந்ததன் எதிரொலியாக ஆவடி பகுதியில் தங்கி பணியாற்றி வரும் தனியார் மற்றும் அரசு நிறுவன தொழிலாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.