Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் அமீர் மற்றும் பவானி கலப்புத் திருமணம் செல்லுமா? – தமிழக அரசு விளக்கம்

Tamil Nadu Government Explanation: தமிழ்நாடு அரசு, நடிகர் அமீர் மற்றும் பவானி ரெட்டி கலப்புத் திருமணத்தைச் சட்டப்படி செல்லுபடியாகும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது. சிறப்பு திருமணச் சட்டம் 1954 இன் கீழ் மதம் மாற்றம் செய்யாமல் திருமணம் பதிவு செய்ய முடியும். யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட தவறான தகவலுக்கு இதுவே பதிலாகும்.

நடிகர் அமீர் மற்றும் பவானி கலப்புத் திருமணம் செல்லுமா? – தமிழக அரசு விளக்கம்
கலப்புத் திருமணத்தை பதிவு செய்ய முடியுமா Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 23 Apr 2025 07:34 AM

சென்னை ஏப்ரல் 23: நடிகர் அமீர் மற்றும் பவானி (Actor Aamir and Bhavani) கலப்புத் திருமணம் (Interfaith Marriages) செய்தனர். இருவரும் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருமணம் செல்லாது என மூத்த நடிகர் பயில்வான் ரங்கநாதன் (Payilvan Ranganathan) கூறினார்.இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. இதற்கு தமிழக அரசு பதிலளித்து, இது பொய்யான தகவல் என தெரிவித்துள்ளது. சிறப்பு திருமணச் சட்டம் 1954ன் கீழ் மதம் மாறாமல் திருமணம் பதிவு செய்ய முடியும். எனவே இவர்களது திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும்.

கலப்புத் திருமணங்களை பதிவு செய்ய முடியாது: யூடியூபர் பயில்வான் ரங்கநாதன்

சமீபத்தில் நடிகர் அமீர் மற்றும் நடிகை பவானி ரெட்டி திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது திருமணம் செல்லுபடியாகாது என்றும், தமிழ்நாடு பதிவுத்துறையில் கலப்புத் திருமணங்களை பதிவு செய்ய முடியாது என்றும் யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் கூறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கலப்புத் திருமண பதிவு செய்ய முடியாதா? – தமிழக அரசு விளக்கம்

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, இது முற்றிலும் தவறான தகவல் எனத் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில், “இருவேறு மதத்தினர் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளலாம்; அவை தமிழக பதிவுத்துறையால் பதிவு செய்யப்படுகின்றன,” என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவிய தகவல்

பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோவில், “இஸ்லாமியரான அமீர், கிறிஸ்தவரான பவானி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தங்கள் மதத்தை மாற்றவில்லை என்பதால், இந்த திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாது. தமிழ்நாட்டின் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இது பதிவு செய்யப்படாது” என்று கூறப்பட்டிருந்தது. இந்தக் கருத்துகள் பலரால் பகிரப்பட்டன.

உண்மையில் சட்டம் என்ன கூறுகிறது?

இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ள சிறப்பு திருமணச் சட்டம் 1954ன் கீழ், வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இருவரும் மதம் மாற்றம் செய்யாமலேயே திருமணம் செய்து கொள்ளலாம். இந்தச் சட்டம் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் பௌத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும்.

திருமணத்திற்கான முக்கிய விதிமுறைகள்

  • ஆண் குறைந்தபட்சம் 21 வயதிலும், பெண் 18 வயதிலும் இருக்க வேண்டும்.
  • மனநல குறைபாடின்றி இருவரும் சம்மதத்துடன் திருமணம் செய்ய வேண்டும்.
  • முன்னதாக திருமணம் செய்து கொண்டவராக இருப்பின், உரிய விவாகரத்து ஆவணங்கள் தேவை.
  • திருமணத்திற்கு முன் 30 நாட்கள் முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும்.
  • எதிர்ப்பு வந்தால் விசாரணை நடத்தப்படும்; இல்லையெனில் 30 நாட்களுக்கு பிறகு திருமணம் பதிவு செய்யலாம்.

மதம் மாற்றமின்றி திருமணம்: சட்டப்பூர்வமாக சாத்தியம்

சிறப்பு திருமணச் சட்டத்தின் வாயிலாகவே, மதம் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லாமல் கலப்புத் திருமணங்கள் நடைபெற முடிகிறது. இது, மத அடிப்படையிலான திருமணச் சட்டங்களுக்கு மாற்றாக வழங்கப்படும் சட்ட ரீதியான தீர்வாகும்.

நடிகர் அமீர் மற்றும் பவானி மேற்கொண்ட கலப்புத் திருமணம் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக பதிவு செய்யக்கூடியது. அவர்களின் திருமணம் செல்லுபடியாகாது என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள தகவல்கள் தவறானவை. தமிழக அரசு இதற்கான தெளிவான விளக்கத்தையும், பொதுமக்கள் தவறான தகவல்களில் அகப்பட்டுவிடாமல் இருக்க அறிவுறுத்தியுள்ளது.

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!...
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?...
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்...
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?...
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!...
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!...
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!...
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!...
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?...
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!...