மே மாத ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படும்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
Tamil Nadu Government Announced 4 Months DA Arrears | 2025 மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. இருப்பினும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலே உள்ளது. இந்த நிலையில், 2025 மே மாத ஊதியத்துடன் நிலுவை அகவிலைப்படி தொகையும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

சென்னை, மே 16 : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (Tamil Nadu Government Employees) மற்றும் ஓய்வூதியர்களுக்கு 2025 மே மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி (DA – Dearness Allowance) சேர்த்து வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மார்ச், 2025-ல் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான அகவிலைப்படி உயர்வை சேர்த்து இந்த மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆண்டுக்கு இரண்டுமுறை உயர்த்தப்படும் அகவிலைப்படி உயர்வு
இந்தியாவில் பணியாற்றும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அதாவது, 6 மாதங்களுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. ஆண்டின் முதல் அகவிலைப்படி ஜனவரி மாதத்திலும், ஆண்டில் இரண்டாவது முறை ஜூன் மாதத்திலும் அகவிலைப்படி உயர்த்தப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசும், மாநில அரசு ஊழியர்களுக்கு மாநில அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்.
அதன்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால், அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மே மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மார்ச் 2025-ல் அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்போது வரை செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில், 4 மாதங்களாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு தொகை 2025, மே மாத ஊதியத்துடன் மற்றும் ஓய்வூதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி 2 சதவீத அகவிலைப்படி உயர்வு மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.