ஐஸ்கிரீமில் கலப்படம்? உணவு பாதுகாப்புத்துறை கடும் எச்சரிக்கை – என்ன நடந்தது?
தமிழ்நாட்டில் கோடைகாலம் துவங்கியிருக்கிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கடைகளில் ஐஸ்கிரீம் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனைப் பயன்படுத்தி தரம் குறைந்த மற்றும் கலப்படப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
தமிழ்நாட்டில் கோடைகாலம் துவங்கியிருக்கிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கடைகளில் ஐஸ்கிரீம் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனைப் பயன்படுத்தி தரம் குறைந்த மற்றும் கலப்படப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோடை வெப்பம் கடுமையாக உயர்ந்துள்ளது. வருகிற மே 4, 2026 அன்று தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ள நிலையில் அதன் தாக்கம் தற்போதே எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. ஐஸ்கிரீம்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் தரம் குறைந்த அல்லது கலப்படங்களை தவிர்க்க தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : மிரட்ட வரும் மே மாதம்.. 40 டிகிரி வரை எகிறும் வெப்பநிலை.. உஷாரா இருங்க மக்களே.. எச்சரிக்கும் பிரதீப் ஜான்!
குறிப்பாக ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் உண்மைதன்மை, தரம், தயாரிப்பு தேதி காலாவதி தேதி ஆகியவை சரியாக குறிப்பிடப்பட்டிருக்கிறதா? நிறுவனங்களில் உணவுப்பாதுகாப்பு உரிமை எண் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.
மேலும் கோடைகாலத்தில் லாப நோக்கத்திற்காக சில நிறுவனங்கள் ஆபத்தான கலப்படங்களை பயன்படுத்துவதற்கும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இயற்கை சர்க்கரைக்கு பதிலாக செயற்கையான வேதிப்பொருட்கள் நிறைந்த சுவையூட்டிகள், ஐஸ்கிரீம் வண்ணங்களுக்காக சேர்க்கப்படும் நிறமிகள் மற்றும் ஐஸ்கிரீமின் அடர்த்தியை அதிகரிக்க சலவைத் தூளை பயன்படுத்துவது, குளிர்பானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பாஸ்போரிக் அமிலத்தை பயன்படுத்துவது அசுத்தமான நீரை பயன்படுத்துவது போன்ற விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனனங்கள் மூது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த கண்காணிப்பு கோடை காலம் முழுவதும் தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : ரயில், பேருந்துகளில் இடமில்லை… விமான கட்டணம் கட்டுப்படியாகவில்லை.. கடும் விலை உயர்வால் தவிக்கும் பயணிகள்!
மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாழ்க்கும் ஐஸ்கரீம் மற்றும் குளிப்ரானங்ள் தரமற்றதாக தெரிந்தாலோ அல்லது காலவாதியான தேதி தாண்டி விற்கப்பட்டாலோ புகாரளிக்கலாம் என்றும் அதிகாரிகள் உடனடியாக சோதனயில் ஈடுபட்டு விதமீறல் கண்டறியப்பட்டால் உரிய நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தள்ளது.
கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் தேவை அதிகரித்திருக்கிறது. இதனை பயன்படுத்தி சில நிறுவனங்கள் லாப நோக்கில் கலப்படங்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தான் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.