AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

CSKvsGT : சாய் சுதர்சன் அதிரடி – சிஎஸ்கேவை எளிதாக வென்ற குஜராத் டைட்டன்ஸ்

IPL 2026 : சாய் சுதர்சன் அதிரடி காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் எளிதாக வென்றது. இதன் மூலம் அந்த அணி தொடர் தோல்விகளில் இருந்து மீண்டுள்ளது. இதனையடுத்து சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

CSKvsGT : சாய் சுதர்சன் அதிரடி – சிஎஸ்கேவை எளிதாக வென்ற குஜராத் டைட்டன்ஸ்
Csk Vs Gt
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 26 Apr 2026 20:07 PM IST

சாய் சுதர்சன் அதிரடி காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் எளிதாக வென்றது. இதன் மூலம் அந்த அணி தொடர் தோல்விகளில் இருந்து மீண்டுள்ளது. 2026 ஐபிஎல் தொடரின் 37வது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டயில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி, 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி பிரம்மாண்ட வெற்றி பெற்றனர். சாய் சுதர்ஷனின் அதிரடி ஆட்டமும், பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சும் குஜராத்தின் வெற்றிக்கு வழிவகுத்தன.

தனியாக போராடிய ருதுராஜ்

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியை தொடக்கத்தில் இருந்தே குஜராத் பவுலர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன், உர்வி படேல், சர்ஃபாஸ் கான், பிரேவிஸ் என அந்த அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் தனியாளாக போராடி அணியை சரிவிலிருந்து மீட்டார்.

இதையும் படிக்க : IPL 2026: பந்தை பிடிக்க முயற்சி .. என்கிடிக்கு தலையில் பலத்த காயம்.. ரசிகர்கள் ஷாக்!

அவருடன் ஒரு கட்டத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷிவம் துபே ஒரு சிக்சர், 3 பவுண்டரிகள் பறக்கவிட்டார். ஆனால் அவரது ஆட்டமும் நீண்டநேரம் நீடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்காததால் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனியாளாக போராடி அரை சதம் கடந்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது. குஜராத் அணியின் ரபாடா 3 விக்கெட்டுகளையும் அர்ஷத் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

குஜராத்தின் வெற்றிக்கு கைகொடுத்த சாய் சுதர்சனின் அதிரடி

இதனையடுத்து அந்த அணியின் துவக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ரன் சேர்க்கத் தொடங்கினர். சுப்மன் கில் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் மற்றொரு பக்கம் சாய் சுதர்சன் தனது அதிரடியைத் தொடர்ந்தார்.

இதையும் படிக்க : IPL 2026: ஷ்ரேயாஸ் விடுவிப்பு! கேகேஆர் செய்தது பெரிய தவறு.. ஒப்புகொண்ட முன்னாள் பயிற்சியாளர்!

அவரை கட்டுப்படுத்த முடியாமல் சென்னை பந்துவீச்சாளர்கள் திணறினர். அதிரடியாக ஆடிய அவர் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 7 சிக்சர், 4 பவுண்டரிகள் என 46 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஜோஸ் பட்லர் நிதானமாக ஆடி எளிதாக வெற்றி பெற செய்தார். இதனையடுத்து அந்த அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை சொந்த மண்ணிலேயே மிக எளிதாக வீழ்த்தியது.

 

Follow Us