27 ஆண்டுகளுக்கு பின் பயங்கரவாதிகள் சிக்கியது எப்படி? டிஜிபி ஷங்கர் ஜிவால் விளக்கம்!

1998 Coimbatore Bomb Blast Case : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தமிழக டிஜிபி ஷங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் அறம் மூலம் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடும் பணிகள் நடைபெற்றதாகவும் ஷங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

27 ஆண்டுகளுக்கு பின் பயங்கரவாதிகள் சிக்கியது எப்படி? டிஜிபி ஷங்கர் ஜிவால் விளக்கம்!

தமிழக டிஜிபி ஷங்கர் ஜிவால்

Updated On: 

11 Jul 2025 22:31 PM

சென்னை, ஜூலை 11 : பல ஆண்டுகளாக தலைமறைவாகி இருந்த பயங்கரவாதிகள் எப்படி கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்து தமிழக டிஜிபி ஷங்கர் ஜிவால் (Tamil nadu DGP shankar Jiwal) விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ஆபரேஷன் அறம் மூலம் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். 1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் (1998 Coimbatore Bomb Blast Case) தொடர்பாக சாதிக் என்பவர் 2025 ஜூலை 10ஆம் தேதியான நேற்று கைது செய்யப்பட்டார். 27 ஆண்டுகள் தலைமறைவாகி இருந்த சாதிக் ராஜாவை தமிழக போலீஸ் கர்நாடகாவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையல், பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டது குறித்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.  சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சங்கர் ஜிவால், ” நீண்ட காலமாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க ஆபரேஷன் அறம் நடைபெற்றது.

பயங்கரவாதிகள் சிக்கியது எப்படி?

தீவிரவாத கைது சம்பவத்தில் கேரளா மற்றும் ஆந்திரா காவல் துறையுடன் இணைந்து தமிழ்நாடு காவல்துறை செயல்பட்டு உள்ளது. இது தீவிரவாத தடுப்பு படையினர் மிகவும் வெற்றிகரமாக இந்த கைது நிகழ்வை நடித்தி உள்ளனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தீவிரவாதிகளை தேடும் பணி இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இரண்டு பேர் இன்னும் தலைமறைவாக இருக்கின்றனர்.

Also Read : அஜித்குமார் காவல் மரணம்: நிகிதா புகார் பொய்யா? சிபிஐ விசாரணையில் புதிய குழப்பம்

டிஜிபி ஷங்கர் ஜிவால் விளக்கம்

சிறப்பு படையினர் ஆந்திர பிரதேசம் மாநிலம் அண்மை மாவட்டம் கடப்பா அருகே உள்ள ராயச் சோட்டியில் அபூர் சித்திக்கை பிடித்தனர். அப்போது மிகவும் ரகசியமான மற்றும் ஆபத்தான நடவடிக்கையின் போது சிறப்பு படையால் மற்றொரு தேடப்படும் குற்றவாளி என முகமது அலி , யூனுஸ் சேக் மன்சூரும் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களும் கைது செய்யப்பட்டனர். குறுகிய இடைவெளியில் ஆந்திர காவல்துறையின் உதவியுடன் அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி, சேக் மன்சூரை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். மற்ற மாநிலங்கள் பொருத்தவரை தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழக குற்றப்பிரிவு தொடர்பான விஷயங்கள் தமிழக குற்றப்பிரிவு ஆவணங்கள் செயலில் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். தற்போது கைது செய்திருக்கும் குற்றவாளிகள் வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணர்களாக இருந்துள்ளனர். வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது எனபது உறுதி செய்யப்பட்டுள்ளது” என கூறினார்.

Also Read : புதுக்கோட்டை : பேனரில் அமைச்சர் மெய்யநாதன் படம் மிஸ்ஸிங்.. வாக்குவாதம்

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள ஒருசில வழக்குகளை வைத்து மொத்த காவல் துறையையும் குற்றம் சொல்ல முடியாது. எதிர்பாராத விதமாக சில தவறுகள் நடந்துவிடுகிறது. அதற்கு உரிய நடவடிக்கைகள் உடனே எடுக்கப்படுவதோடு, எங்கள் வருத்தத்தையும் தெரிவிக்கின்றோம்” என ஷங்கர் ஜிவால் தெரிவித்தார். அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீதான நிலுவை வழக்குகள் குறித்து கேள்விக்கு இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.